உப்பில்லாமல் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பது ரொம்ப வருடங்களாக விவாதத்தில் இருந்து வருகிறது. ஆனால், உணவில் அதிகமான உப்பு சேர்த்துக் கொள்வதால் என்ன உடலில் என்ன நடக்கிறது என்பது குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
அறுசுவைக்கும் தலைவனாய் திகழும் உப்பு, நம் உயிரையும் சுவைப் பார்க்க காத்திருகிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
1. உங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வதன் மூலமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். இது மற்றுமின்றி சிறுநீரகம், வயிறு சார்ந்த கோளாறுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
2. நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும்.
3. உங்களது உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது பக்கவாதமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
4. உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும் , இதன் காரணமாக உங்களுக்கு நீரிழிவு நோய் அதிகரிக்கும். எனவே, இரத்த கொதிப்பு இருப்பவர்கள் உணவில் கட்டாயம் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.
5. பெரும்பாலும் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கு அவர்களது உடலில் உப்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது.
இவையெல்லாம் உணவில் உப்பை அதிகமாக சேர்த்துக் கொள்ளவதால் வரும் பிரச்சனைகள். இதை தவிர்க்க ஒரேடியாக உணவில் உப்பை குறைத்து விடவும் கூடாது. உடலுக்கு தேவையான உப்பின் அளவை குறைத்தால் அது உயிருக்கே ஆபத்து ஆகிவிடும் என்று கனடா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
எனவே, இதற்கு ஒரே தீர்வு உணவில் சீரான அளவு உப்பு எடுத்துக் கொள்வது தான். அதே போல் முடிந்த வரை ஊறுக்காயை தவிர்ப்பது மிகவும் நல்லது.