reshma pasupuleti instagram : நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரான நடிகை ரேஷ்மா பசுபலேட்டி சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியல் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார்.ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்த அந்த சீரியலுக்குப் பிறகு, ‘மசாலா படம்’ படத்தில் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இவர் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்கரன்’ படத்தில் புஷ்பா புருஷன் காமெடி படு வைரலானது.
“புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மக்கள் மத்தியில் ரேஷ்மா பசுபுலேட்டி-யை பிரபலம் அடைய செய்தது.இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்தவர்.ரேஷ்மா கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதுமட்டுமில்லை இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் ரேஷ்மா வெளியிட்ட ஃபோட்டோ ஷூட் படங்கள் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.
அது மட்டும் இல்லாமல் ரேஷ்மா தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்து வருகின்றனர். இன்ஸ்டாவில் ரேஷ்மா பதிவிடும் புகைப்படம் எல்லாமே லைக்ஸ்களை அள்ளும். பிக் பாஸ் இல்லத்தில் இருந்த வரை ரேஷ்மா சற்று உடல் பருமன் அதிகமாகவே காணப்பட்டார். ஆனால் அதன் பின்பு படு ஸ்லிம்மானார். இதற்கு காரணமான அவரது சீக்ரெட்டை ரேஷ்மாவே தனது ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்.
எத்தனை முறை பார்த்தாலும் வெற லெவல் தான்… ராணாவின் கலர்ஃபுல் நிச்சயார்த்த ஃபோட்டோ ஷூட்!
இந்த அந்த வீடியோ:
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ரேஷ்மா அளித்த பேட்டியில் இதனை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ யூடியூப்பில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil