rice cooking tips in tamil: மாறி வரும் உணவு கலாச்சாரத்தில் உணவு தயாரிப்பு முறைகளும் மாறிக்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பாத்திரத்தில் சாதம் வடித்த காலம் மலையேறி, குக்கரில் சாதம் வடிக்கும் காலமாக உள்ளது. எனினும், கிராமங்களில் மற்றும் சிறுநகரங்களில் வசித்து வரும் இப்போதும் பாத்திரத்தில் தான் சாதம் வடிக்கிறார்கள்.
சாதத்தை குக்கரில் வடித்து சாப்பிடுவதை விட, பாத்திரத்தில் வடித்து உண்பது மிகவும் நல்லது என உணவியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி நாம் வடிக்கும் சாதம் மீதம் இருந்தால் அவற்றை வீணாக்கமால் தண்ணீர் ஊற்றியோ அல்லது தண்ணீர் ஊற்றாமலோ நல்ல சைடிஷ்வுடன் அவற்றை ருசிக்கலாம். ஆனால், மீதம் இருக்கும் சாதம் ஒருவேளை சீக்கிரமே கெட்டுப்போனால் என்ன செய்வது? என்கிற கேள்வி இங்கு எழும்.
அதை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. இதற்காகவே சிம்பிள் டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.
வடித்த சாதம் கெடாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ்
நாம் தயார் செய்யும் சாதம் சீக்கிரமே நொசநொசவென செல்ல காரணம், அரிசிக்கு தக்க தண்ணீர் சேர்க்காமல் இருப்பது தான். நீங்கள் சதாம் வைக்க உலை கொதிக்க செய்யும் போது, சற்று அதிக தண்ணீர் சேர்த்துக்கொள்ளுதல் மிகவும் நல்லது. அப்படி சேர்க்கும் இதுபோன்ற பிரச்சனை ஏற்படுவதில் இருந்து தவிர்க்கலாம்.
சாதம் கொதித்து வரும் போது அடுப்பை முழுமையாக குறைக்காமல், மிதமான தீயில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்.
இந்த தருணத்தில் உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். உப்பு சேர்ப்பது குழம்பிற்கு அதிக உப்பு சேர்க்கப்படுவதை தவிர்க்கிறது. நல்லெண்ணெய் சாதம் உதிரியாக இருக்க உதவுகிறது.
சாதத்தை பாதமாக வடித்து கீழே இறக்கவும். 10 நிமிடங்கள் போதுமானது.
இந்த சாதம் நொசநொசவென மாறுமா? அல்லது மாறாத? என்பது நீங்கள் வடிக்கும் சாதத்தின் தண்ணீரே காட்டிக்கொடுக்கும்.
நீங்கள் வடித்த சாதம் (கஞ்சி) தண்ணீர் நீர்ம பதத்தில் இருக்கும் பட்சத்தில் உங்கள் சாதம் சரியான பக்குவத்தில் வெந்துள்ளது என புரிந்துகொள்ளலாம். வடித்த சாத்தின் (கஞ்சி) தண்ணீர் கட்டியாக இருந்தால், வடித்த சாதத்தில் ஏதோ பிரச்சனையுள்ளது. எனவே இரவு நேரத்தில் நொசநொசவென்று மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
சாதம் தண்ணீராக இருந்தால், வடித்து நிமித்திய பின்பு அவற்றை அடுப்பில் சில நிமிடங்களுக்கு அப்படி வைத்து சூடேற்றவும். தண்ணீர் நன்கு சுண்டிவிடும். பிறகு அவை சரியான பக்குவத்திற்கு வந்து விடும்.
சாதத்தை வடித்த பிறகு அவற்றை ஹாட்-பாக்சில் வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அப்படி சாதத்தை ஹாட்-பாக்சிற்கு மாற்றிய பின் அவற்றின் மீது காட்டன் துணியைக் கொண்டு மூடி விடவும்.
இப்படி செய்யும்போது பாக்சின் மூடி மேல் ஒட்டும் ஆவி நீர் மீண்டும் சாதத்தில் விழாமல் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.