Advertisment

பேச்சுலர் டிப்ஸ்: குக்கரில் அரிசி சாதம் இப்படி சிம்பிளா செய்யுங்க!

how to cook normal rice in pressure cooker in tamil: குக்கரில் உதிரி உதிரியாக சாதம் சமைக்க சிம்பிளான டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம். பேச்சுலர்ஸ் மறக்காம ட்ரை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rice recipe in tamil: how to cook rice in cooker tamil

rice cooking in pressure cooker tamil: குக்கரில் அரிசி சாதம் சமைப்பதை கடினமான ஒன்றாக சிலர் பார்க்கின்றனர். ஆனால் இது மிகவும் சுலபமான ஒன்றாகும். பேச்சுலர்கள் இதைத் தெரிந்து கொண்டால், அவர்களின் உணவுப் பிரச்னைக்கு பாதி தீர்வு கிடைத்து விடும். குக்கரில் சமைக்கும் பெரும்பாலானோரின் புகார், குக்கர் அடி பிடிக்கும், சாதம் குலைந்து விடும் என்பது தான். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், உதிரி உதிரியாக சாதம் சமைக்கவும் சிம்பிளான டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.

Advertisment

குக்கரில் அரிசி சாதம் தயார் செய்வதற்கான செய்முறை:-

முதலில் சமைக்க தேவையான அரிசியை குறிப்பிட்ட டம்ளரில் அளந்து எடுத்துக் கொள்ளவும். இங்கு டம்ளர் அளவை நினைவில் வைத்துக் கொள்ளவும். இது, குக்கரில் அரிசிக்கு தண்ணீர் ஊற்ற எளிமையாக இருக்கும்.

இப்போது எடுத்த அரிசியை சுத்தமான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த அரிசியை தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளுங்கள். முதல் அலசலுக்குப் பிறகு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக கைகளால் அரிசியை கழுவுங்கள். அதன் பிறகு, குறைந்தது இரண்டு முறை என, மொத்தம் 3 முறை அரிசியை நன்றாக அலசிக் கொள்ளவும்.

publive-image

ஒரு டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் என்பது தான் சரியான பதமாகும். எனவே அதற்கேற்றார் போல் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றியப் பின், அதனுள் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எண்ணெய் ஊற்றுங்கள். இது, சோறு குலையாமல் உதிரி உதிரியாக இருக்க உதவும்.

குக்கரில் உதிரியான சாதம் செய்வது எப்படி? – வீடியோ

குக்கரில், விசில் போடாமல் மிதமான சூட்டில் அடுப்பில் வையுங்கள். குக்கரில் தண்ணீர் பிரஷர் அடிக்கும் போது விசில் போட்டு மூட வேண்டும். விசில் சத்தம் 3 முறை கேட்டதும் அடுப்பை அணைத்துவிடவும். உடனே குக்கர் மூடியை திறக்காமல் அடுப்பிலேயே விட்டுவிடுங்கள்.

குக்கரில் பிரஷர் தானாக இறங்கிய பிறகு, மூடியை திறங்கள். தற்போது கரண்டியால் சாதத்தை கிளறிப்பாருங்கள். பூப்போல சாதம் வெந்திருக்கும்.

இந்த சிறிய ரகத்தியத்தைக் கொண்டு உதிரியாக சோறு சமைத்து உங்களுக்கு விருப்பமான சைடிஷ்வுடன் ருசித்து மகிழவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Food Tips Healthy Food Tips Tamil Lifestyle Update Healthy Food Tamil News 2 Tamil Food Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment