குக்கரும் வேண்டாம்… வடிக்கவும் வேண்டாம்… உதிரியான சாதம் சிம்பிள் செய்முறை!

how to cook rice without straining in tamil: சாதத்தை குழையாமல் எப்படி வடிப்பதென்று கூகுளில் பல முறை நிச்சயம் தேடி இருப்போம். அதற்கு சரியான விடை கிடைத்ததா என்றால் கேள்விக் குறிதான்.

Sambar recipes in tamil: Instant Sambar Without Dal For Idli in tamil

Rice recipe in tamil: சாதம் வடித்து சாப்பிடவே மனமில்லாத இந்த நவீன காலத்தில் சாதத்தை குழையாமல் வடிப்பது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. மேலும், சாதம் செய்ய வேண்டும் என்று நினைத்தலே நம்மில் பலருக்கு மைன்ட் வேலை செய்வது நின்று விடும். அடுப்பில் வைத்து இருக்கும் போது சாதம் குழைந்து விடுமோ என்கின்ற கவலை வேறு நம்மை தொற்றிக்கொள்ளும்.

சாதத்தை குழையாமல் எப்படி வடிப்பதென்று கூகுளில் பல முறை நிச்சயம் தேடி இருப்போம். அதற்கு சரியான விடை கிடைத்ததா என்றால் கேள்விக் குறிதான். சரி குக்கரிலாவது சமைக்கலாம் என்றால், குக்கரில் சமைப்பது பலருக்கு பிடிக்காது. சாதத்தை வேக வைத்து உதிரியாக சாப்பிட்டால்தான் அவர்களுக்கு திருப்தி.

குக்கர் இல்லாமலும், சாதத்தை வடிக்காமலும் உதிரியாக சாதம் எப்படி தயார் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

உதிரி சாதம் செய்முறை:

உதிரியாக சாதம் செய்வதற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி எடுத்துக் கொள்ளாவோம். அவற்றுக்கு தண்ணீர் அளவு நாம் அரிசியுடன் தண்ணீர் சேர்க்கும் போது அது உங்கள் விரலின் இரண்டு இஞ் இருக்குமளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இவற்றுடன், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் வைத்து பாத்திரத்தை நன்கு மூடி கொதிக்க விடவும். அவை நன்கு கொதித்து வரும் மூடியை திறந்து கொள்ளலாம்.

பிறகு ஒரு தாளத்தை எடுத்து பாத்திரத்தை முக்கால் பகுதி மூடி சாதத்தை வேக வைக்கவும்.

சாதம் நன்கு ஓரளவுக்கு வெந்த பின்னர் தீயை குறைத்துக் கொள்ளவும்.

சாதம் முக்கால் பகுதி வெந்த பின்னர் அடுப்பை அனைத்துக்கொள்ளவும்.

பிறகு, கடையாக 2 நிமிடத்திற்கு பாத்திரத்தை மூடி எடுத்துக்கவும்.

இப்போது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உதிரி சாதம் தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த குழும்புகளுடன் சேர்த்து ருசிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rice recipe in tamil simple steps to cook rice tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com