சமந்தா அக்கினேனி தனது சமீபத்திய படமான ’ஜானு’ புரொமோஷன்களில் பிஸியாக இருந்தார். படத்தின் பெயரைக் கொண்ட கஸ்டமைஸ்டு புடவையில், ஜானு படத்தின் புரோமோஷனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். டிஸைனர் ஊர்வசி சேதி வடிவமைத்துள்ள அந்த புடவை, ஜெய்ப்பூரின் பிச்சிகா பிராண்டின் ப்ளஷ் பிங்க் கலர் புடவை. சேலையில் ஜானு என்ற படத்தின் தலைப்பு முன்புறம் இடம்பெற்றிருந்தது. அதோடு அழகான ஃப்ளோரல் பிரிண்டுகளையும் கொண்டிருந்தது. கையால் வரையப்பட்ட பியூர் இத்தாலிய ஆர்கன்சா எம்பிராய்டரியில், ரோஜா மலர்கள் கஸ்டமைஸ்டாக டிஸைன் செய்யப்பட்டிருப்பதாக, டிஸைனர் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
#BroomstickChallenge னு ஏமாற்றியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்தது நாசா
இந்த ஆறு கஜம் புடவைக்கு அதே நிறத்தில் ஹால்டர் ஸ்ட்ராப் பிளவுஸை மேட்ச் செய்தார் சமந்தா. அதோடு ப்ளஷ் பிங்க் மேக்கப்புடன், லூசான போனி டெய்ல் ஹேர் ஸ்டைல் அவருக்கு கம்ப்ளீட் லுக் கொடுத்தது.
ஜப்பான் சொகுசு கப்பலில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்… தமிழர்களின் நிலை என்ன?
இதற்கு முன்பு, நடிகை கரீனா கபூர் இதேபோன்ற புடவை அணிந்திருந்தார். ஆனால் ஒரு ட்விஸ்ட் இருந்தது. புடவையில் அவரது செல்லப் பெயரான ‘பெபோ’ என எழுதப்பட்டிருந்தது. பியூர் இத்தாலிய ஆர்கன்சா பவுடர் ப்ளூ கலர் சேலையில் ஹேண்ட் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. கரீனாவுக்கு புடவையில் வலம் வருவது புதியது இல்லை என்றாலும், பிச்சிகாவின் புடவை வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது. அதில் ‘பெபோ’ என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது. ரியா கபூரின் ஸ்டைலிங்கில், ஒன் ஷோல்டர் பிளவுஸை மேட்ச் செய்திருந்தார் கரீனா கபூர். முடியை லூஸாக பின்னியிருந்த அவர், ஸ்மோக்கி ஐஸ், நியூட் லிப்ஸ் ஆகியவை அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்திருந்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.