Sambar in cooker Tamil: தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக சாம்பார் உள்ளது. இதன் ஸ்பெஷாலிட்டியே நாம் இவற்றை எந்த உணவுகளுடனும் சேர்த்து ருசிக்கலாம். உதாரணமாக காலை உணவுகளான இட்லி, தோசை, ஆப்பம், வடை ஆகியவற்றுடனும், மதிய உணவுகளான சாதம் வெரைட்டி ரைஸ் போன்றவற்றுடனும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த சுவையான சாம்பாரை தயார் செய்ய பல வழிகள் இருந்தாலும் குக்கரில் தயார் செய்வது ரொம்பவே ஈஸியான வழியாகும். இந்த வழியை நம்மில் பலர் முயற்சி இருந்தாலும் ஏதோ ஒன்றை குறைவாகவோ அல்லது நிறைவாகவோ சேர்த்து விட்டோம் என்ற எண்ணம் தோன்றும். இது போன்ற சிறு குழம்பம் ஏற்படாத வண்ணம் இருக்கத்தான் இந்த சிம்பிள் செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.
குக்கரில் இன்ஸ்டன்ட் சாம்பார் செய்யத்தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 3/4 கப்
சவ் சவ் காய் – 250 கிராம்
தக்காளி – 1
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவைக்கேற்ப (கிட்டத்தட்ட 2 கப்)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் + நெய் – 1 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
கடுகு விதைகள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
வெந்தயம் – சிறிதளவு
சிவப்பு மிளகாய் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காய பொடி – 1/4 தேக்கரண்டி

குக்கரில் சாம்பார் சிம்பிள் செய்முறை:
முதலில் துவரம் பருப்பை குக்கரில் இட்டு 2 விசில் வரும் அளவிற்கு பதமாக வேக வைத்துக்கொள்ளவும்.
குக்கரின் சூடு குறைந்த பிறகு அவற்றை திறந்து அதில் நறுக்கி வைத்துள்ள சவ்சவ் காய் சேர்த்துக்கொள்ளவும்.
தொடர்ந்து கரைத்து வைத்துள்ள புளி கரைசலில் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும். பிறகு அந்த கரைசலையும் குக்கரில் சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பில் ஏற்றி 2 விசில் வரும் அளவிற்கு வேக விடவும்.
2 விசில் வந்த பிறகு அவற்றை கரண்டியால் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் கூட சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி கொள்ளலாம்.
இப்போது தனியாக ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதை தாளிக்க தயார்ப்படுத்திக்கொள்ளவும். தொடர்ந்து தாளிக்க மேலே வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து கொள்ளவும். அவை தயாரானதும் முன்பு குக்கரில் தயார் செய்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான சாம்பார் தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்தமான உணவுகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil