sambar recipe in tamil: நம்முடைய அன்றாட உணவுகளின் பட்டியலில் சாம்பாருக்கு மிக முக்கிய இடம் உண்டு. இதன் ஸ்பெஷாலிட்டியே நாம் இவற்றை எந்த உணவுகளுடனும் சேர்த்து ருசிக்கலாம். உதாரணமாக காலை உணவுகளான இட்லி, தோசை, ஆப்பம், வடை ஆகியவற்றுடனும், மதிய உணவுகளான சாதம் வெரைட்டி ரைஸ் போன்றவற்றுடனும் எடுத்துக்கொள்ளலாம்.
பல வகையான சாம்பாரை கொண்டுள்ள இந்த சுவையான சாம்பாரை தயார் செய்ய பல வழிகள் உள்ளன. அதில் சிம்பிள் வழியான ஒன்றைத் தான் இன்று பார்க்க இருக்கிறோம். இந்த சாம்பாரை தயாரிக்க நமக்கு 10 நிமிடங்கள் போதும். அதுவும் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்து அசத்தலாம்.

வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சாம்பார் செய்வது எப்படி?
முதலில் ஒரு குக்கர் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து பொரிய விடவும்.
இதன் பிறகு, தணலை மிதமான சூட்டில் வைத்து வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
தொடர்ந்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து அந்த மிதமான சூட்டிலே வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கிய பிறகு, அவற்றுடன் சாம்பார் காய்களை சேர்த்து வதக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சாம்பார் மசாலா சேர்த்து கலக்கவும்.
பிறகு ஊறவைத்த துவரம் பருப்பு கலவையை சேர்க்கவும். இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
தொடர்ந்து புளித்தண்ணீர் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
குக்கர் மூடியை நன்றாக மூடி நான்கு விசில்கள் வரும் வரை காத்திருக்கவும்.
மூடியைத் திறந்து காய்கறிகளை சிறிது மசிக்கவும்.
பின்னர், எண்ணெயில் உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளிப்பை அவற்றுடன் சேர்க்கவும்.
இப்போது கொத்தமல்லி தழையை சேர்த்து, கீழே இறக்கினால் சுவையான சாம்பார் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“