Advertisment

பருப்பு, காய்கறி வேண்டாம்… இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் செய்முறை!

how to make idli sambar without dal in tamil: சிலர் சாம்பார் தயார் செய்ய அதிக நேரம் பிடிக்கும் என நினைத்து மற்ற சைடிஸ்களை நோக்கி நகர்கின்றனர். ஆனால், இட்லிக்கான இன்ஸ்டன் சாம்பார் ஈஸியாக தயார் செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sambar recipes in tamil: Instant Sambar Without Dal For Idli in tamil

Sambar recipes in tamil: தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக இட்லி உள்ளது. இந்த அற்புதமான உணவுடன் எந்த சைடிஸ் சேர்த்து ருசித்தாலும் அருமையாக இருக்கும். எனினும், இட்லியுடன் சாம்பார் சேர்த்து உட்கொள்ளும்போது அதன் சுவையே தனி தான். அந்த அளவிற்கு இவை இரண்டிற்குமான காம்பினேஷன் இருக்கும்.

Advertisment

சிலர் சாம்பார் தயார் செய்ய அதிக நேரம் பிடிக்கும் என நினைத்து மற்ற சைடிஸ்களை நோக்கி நகர்கின்றனர். ஆனால், இட்லிக்கான இன்ஸ்டன் சாம்பார் ஈஸியாக தயார் செய்யலாம். அவை செய்யத் தேவையான பொருட்களையும், எளிய குறிப்பையும் இங்கு வழங்கியுள்ளோம்.

இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்:

எண்ணெய் - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

சோம்பு - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

கருவேப்பிலை - 1 கொத்து

தக்காளி - 3 (நறுக்கியது)

உப்பு - சுவைக்கேற்ப

இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்.

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

மல்லி தூள் - 1 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

அரைக்க

தேங்காய் - 1/2 மூடி

பொட்டுக்கடலை - சிறிதளவு

பட்டை - 2

கிராம்பு - 5

சோம்பு - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் செய்முறை:

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் அவற்றில் கடுகு சேர்க்கவும். அவை நன்கு பொரிந்ததும், சிறிதளவு சோம்பு சேர்க்கவும்.

பின்னர் நறுக்கிய வைத்துள்ள பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். அவை பொன்னிறமாக வதங்கியவுடன் அவற்றோடு நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், இஞ்சி - பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

பின்னர், மஞ்சள், மல்லி, மிளகாய் தூள்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வதக்கி கொள்ளவும்.

இதன் பிறகு, முன்னர் அரைத்து வைத்துள்ள தேங்காயை அவற்றுடன் சேர்த்துக்கொள்ளவும்.

இவை சில நிமிடங்களுக்கு கொதித்த பின்னர் கொத்தமல்லி இலை தூவி கீழே இறக்கவும்.

சேலம் பகுதிகளில் தயார் செய்யப்படும் இந்த பருப்பு இல்லாத இன்ஸ்டன்ட் சாம்பரை நீங்கள் ஒரு முறை முயற்சித்து ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Food Tips Lifestyle Food Recipes Sambar Recipe Tamil Sambar Recipe Food Tips Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment