விரதம் இருக்கும் நாளில் வாயில் ஒரு மலை நெல்லிக்காய்; இந்த மேஜிக் நடக்கும்: சத்குரு

விரதம் இருப்பவர்கள் தங்கள் வாயில் ஒரு மலை நெல்லிக்காயை வைத்திருக்கலாம் என்று சத்குரு கூறுகிறார். இதன் மூலம் அதிக நேரம் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும் கஷ்டம் தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

விரதம் இருப்பவர்கள் தங்கள் வாயில் ஒரு மலை நெல்லிக்காயை வைத்திருக்கலாம் என்று சத்குரு கூறுகிறார். இதன் மூலம் அதிக நேரம் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும் கஷ்டம் தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Amla uses

விரதம் என்பது நம் பாரம்பரியத்தின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. அனைத்து மதத்தினரும் விரதத்தை கடைபிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். எனினும், இவற்றின் நடைமுறைகள் மட்டுமே அவ்வப்போது மாற்றம் அடைந்து இருக்கும்.

Advertisment

இது தவிர உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் சிலர் விரதம் இருப்பார்கள். இது உடலின் கழிவுகளை அகற்ற உதவும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு விரதம் இருப்பவர்கள் கஷ்டம் தெரியாமல் இருக்கும் வகையில் பின்பற்றக் கூடிய ஒரு டிப்ஸை சத்குரு தெரிவித்துள்ளார்.

நீங்கள் விரதம் இருக்கும் போது உங்கள் வாயில்  ஒரு நெல்லிக்காய் வைத்துக் கொள்ள வேண்டும் என சத்குரு வலியுறுத்துகிறார். குறிப்பாக, மலை நெல்லிக்காயை இதற்கு பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதனை மென்று கொண்டே இருக்கலாம் என்று சத்குரு கூறுகிறார்.

இல்லையென்றால் நீங்கள் விரதம் இருக்கும் போது, செரிமானத்திற்கான நொதிகள், அதற்கான வேலையை ஆரம்பித்து விடும். இவை சிறிது நேரத்திலேயே ததும்ப தொடங்கி விடும். இந்த நொதிகள் அதிகமாக ததும்பினால், உங்களுக்கு வாந்தி வந்து விடும் என்று சத்குரு தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

ஏனெனில், செரிமானத்திற்கான நொதிகள் ஒரு விதமாக சேர்ந்து கொண்டே செல்லும் ஆற்றல் கொண்டது. அதன் காரணமாக உங்கள் உடலுக்குள் புளிப்பை சேர்த்தால், அந்த நிலை சரியாகி விடும். இது மனித அமைப்பை பற்றிய ஒரு விதமான புரிதல். ஒரே ஒரு நெல்லிக்காயை உங்கள் வாயில் வைத்திருந்தால், அது உங்களை தொடர்ச்சியாக இயங்க வைக்கும் என்று சத்குரு வலியுறுத்துகிறார்.

இதன் மூலம் சுமார் மூன்று அல்லது நான்கு மணி நேரம் சாப்பிடாமல் இருந்தாலும், பசியால் கஷ்டமில்லாமல் இருக்க இந்த முறை உங்களுக்கு பலன் அளிக்கும். இந்த நெல்லிக்காய், செரிமானத்திற்கான நொதிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று சத்குரு விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி - Sadhguru Tamil Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Benefits of drinking Amla juice for health Benefits of amla

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: