இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. பெரும்பாலும் இரவு உணவுக்கு எல்லோரின் விருப்பம் சப்பாத்தியாக இருக்கிறது. ஆனால் சப்பாத்தி சூட இருக்கும்போது மட்டுமே நம்மால் சாப்பிட முடியும். ஆறிவிட்டால் ரப்பர் போன்றதாகிவிடுகிறது.
எனவே, இந்த செய்திதொகுப்பில் நீங்கள் சூடும் சப்பாத்தியை நீண்ட நேரம் சாஃப்டாக வைத்திருக்கும் வழிமுறையை காணலாம்.
மாவில் எண்ணெய் சேர்ப்பது
உங்கள் கோதுமை மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது, சப்பாத்தியை சுவையாகவும், மென்மையானதாகவும் மாற்றுகிறது. மேலும், கடாயில் இருக்கும் போது சப்பாத்திகள் அதிக ஈரப்பதத்தை இழக்காமல் வேகமாக சூடாக உதவியாக இருக்கும்.
மாவில் தண்ணீரை சரியான அளவில் சேர்க்க வேண்டும்
பலரும் அவசரத்தில் தண்ணீர் ஊற்றாமல் மாவை பிசைவதால்,சில நேரங்களில் கட்டியாக மாறிவிடுகிறது. சரியான அளவில் தண்ணீரை சேர்த்து மாவை பொறுமையாக பிசைவது அவசியமாகும். வேண்டுமானால், மாவில் வெதுவெதுப்பான நீர் அல்லது பால் சேர்த்து, 15 நிமிடங்களை பிசையலாம். 20 முதல் 30 நிமிடம் ஊறவைத்தால், மாவு ஊருட்டுவதற்கு சாஃப்டாக இருக்கும்
சரியான அளவில் சப்பாத்தியை உருட்டுவது
சப்பாத்தியை உருட்டுவதற்கு முன்பு, நீங்கள் மாவில் பிடிக்கும் உருண்டை குட்டியாகவும், எவ்வித பிளவுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். உருண்டையை உருட்டுவதற்கு முன்பு, அதன் மேற்பரப்பில் மாவை தெளிக்க விட்டுதான் வேலையை தொடங்க வேண்டும். பெரும்பாலும், 5 முதல் 7 அங்குல விட்டம் மற்றும் 1.5 மிமீ முதல் 2.5 மிமீ தடிமன் கொண்ட சப்பாத்திகளை உருட்ட முயற்சிக்கவும்.
சப்பாத்தியை நன்றாக சூட வேண்டும்
சப்பாத்தி நடு பகுதி ஊதி வரவில்லையெனில், அதனை ஸ்பூன் மூலம் லைட்டாக பிரஸ் செய்யலாம். 60 நொடிகளுக்கு மேல் சப்பாத்தி அடுப்பில் இருக்கக்கூடாது. ஏதேனும் பகுதிகள் வேகவில்லை என தெரிந்தால், ஸ்பூன் மூலம் அதனை கீழே அழுத்த வேண்டும். சப்பாத்தியை பேனில் போட்டுவதற்கு முன்பு, சூடை குறைவாக பார்த்துகொள்ள வேண்டும். இல்லையெனில், சப்பாத்தி ஊதி வராது.
சமைக்கும் நேரம்
உங்கள் ரொட்டியை சமைப்பதற்கு முன் பான் வெப்பநிலை சுமார் 160-180 டிகிரி இருக்க வேண்டும். நீங்கள் ரொட்டியை கடாயில் வைத்தவுடன், முதல் சைடை வெறும் 10 முதல் 15 நொடிகள் வரை சமைக்க வேண்டும்.பின்னர். அதை புரட்டி 30 முதல் 40 வினாடிகள் சமைக்க வேண்டும்.
கடாயும் முக்கியம்
மென்மையான சப்பாத்திகளை தயாரிப்பதற்கு, அவற்றை சமைக்க நீங்கள் பயன்படுத்தும் கடாயில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதன் தடிமன் காப்பர் சட்டி என்றால் 1.5 மிமீ ஆகவும், ஸ்டீல் பான் என்றால் 3 மிமீ ஆகவும், அலுமினியம் பான் என்றால் 2 மிமீ ஆகவும் இருக்க வேண்டும்.கடாயின் மேற்பரப்பு சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும்.
சப்பாத்தியில் நெய் தெளித்தல்
சப்பாத்தி சூட்டதும், அது பெருசா இருப்பதை ஸ்பூன் மூலம் தட்ட வேண்டும். கைகளை பயன்படுத்தக்கூடாது. உங்கள் சப்பாத்திகள் சூடாக இருக்கும் போது சிறிது நெய்யை தடவினால், அது ஈரப்பதமாக இருக்கும். அவற்றின் சுவையை அதிகரிக்கும்.அவ்வளவு தான், நல்ல சைடிஷ் செய்து, சாஃப்டான சப்பாத்தியை சாப்பிட வேண்டியதுதான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.