Advertisment

நான் தவம் இருந்துதான் குழந்தையைப் பெற்றேன் - நீலிமா ராணி ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்!

Serial Actress Neelima Rani Fitness secrets இந்த இரண்டும் உங்கள் உடல் எடையைக் குறைக்கவோ கூட்டவோ செய்யாது. ஆனால், சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Serial Actress Neelima Rani Fitness secrets Tamil News

Serial Actress Neelima Rani Fitness secrets

'தேவர் மகன்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 'நான் மகான் அல்ல', 'குற்றம் 23', 'முரண்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் மனதில் 'மெட்டி ஒளி' சக்தி செல்வமாகவும், 'கோலங்கள்' ரேகா அர்ஜூனாகவும், 'தென்றல்' லாவன்யாவாகவும், 'வாணி ராணி'' டிம்பிளாகவும்தான் இன்றுவரை நீலிமா ராணி நிலைத்து நிற்கிறார்.

Advertisment
publive-image
Neelima Rani Photos

எண்ணிலடங்கா சின்னத்திரை சீரியல்களில் நடித்த நீலிமா, அன்று முதல் இன்றுவரை தன் ஒரேபோன்றுதான் தோற்றமளிக்கிறார். ஓர் குழந்தையை ஈன்றெடுத்தபோதிலும், ஃபிட்னெஸ் கடைப்பிடிக்கும் இவருடைய ஃபிட்னஸ் சீக்ரெட்டுகளை அடுக்குகிறார்.

publive-image
Neelima Rani in Saree

"ஆரோக்கியமான சருமம் மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான உணவுதான் முக்கியம். அதேபோல நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதும் அவசியம். எந்தவிதமான பச்சை பழங்கள், கீரை, காய்கறிகள் மற்றும் வேகவைத்த உணவுகளும் உடலுக்கு மிகவும் நல்லது. உணவுகளோடு யோகா மற்றும் தியானம் செய்வது அவசியம். இந்த இரண்டும் உங்கள் உடல் எடையைக் குறைக்கவோ கூட்டவோ செய்யாது. ஆனால், சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். உடல் எடையில் மாற்றம் தேவைப்பட்டால் கண்டிப்பாக ஜிம்முக்குதான் செல்லவேண்டும்.

publive-image
Serial Actress Neelima Rani

நான் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் நான் தவம் இருந்தேன் என்றுதான் சொல்லுவேன். யோகா, தியானம், சரியான டயட், உடற்பயிற்சி, மன அமைதி தரும் பாடல்கள் என சீரான சரியான விஷயங்களையெல்லாம் பின்பற்றினேன்.

publive-image
Vani Rani fame Dimple Neelima Rani in Saree

நிறையபேர் தங்களின் உடலமைப்பை மனதில் வைத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவார்கள். அப்படியெல்லாம் செய்ய கூடாது. நிச்சயம் தாய்ப்பால் கொடுப்பது குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே ஆரோக்கியமான ஒன்று. மேலும், சத்தான உணவு வகைகளைத் தேடித்தேடி சாப்பிட வேண்டும். ஜங்க் உணவுகளை நிச்சயம் தவிர்க்கவேண்டும். இளம் வயதில் எந்த அளவிற்கு சத்தான உணவுகளை உட்கொள்கிறோமோ அந்த அளவிற்கு வயதான காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம்.

publive-image
Neelima Rani Photoshoot

எனக்கு மிகவும் கம்ஃபோர்டேபிளான உடை என்றால் புடவைதான். மாடர்ன் உடைகளெல்லாம் எப்படிதான் போடுகிறார்களோ. ஒருகாலத்தில் எனக்கு உடைகளை தேர்வு செய்யவே தெரியாது. ஆனால், என்னுடைய கணவர் எனக்கு மிகவும் உதவி செய்தார். என்னுடைய உடை தேர்வு முற்றிலும் மாறியதற்கான காரணம் என் கணவர்தான். என்னுடைய ஃபேவரைட் நிறங்கள் பேஸ்ட்டல்ஸ் மற்றும் மஸ்டர்டு".

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neelima Rani Fitness Beauty Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment