முகத்திற்காக எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்??

அழகாக இருக்க் வேண்டும் என்று பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் விரும்ப ஆரம்பித்து விட்டனர். `பளிச்’ என, அழகாக இருக்க வேண்டும் என்பது இன்று எல்லோருக்குமான ஆசை. ஆனால், பலரும் `சிவப்புதான் அழகு; பகட்டுதான் பளிச்’ நினைக்கிறார்கள்.  ஆனால் அது தவறு. கலையான முகம் எந்த நிறத்தில் இருந்தாலும் அவர்கள் அழகு தான்.

ஆணோ பெண்ணோ, இளம் வயதில் வசீகரத்துக்காக அக்கறைப்படும் அளவுக்கு வயதான பின்னர் அதைப் பற்றி யோசிக்காமல் இருப்பதும் அழகைத் தொலைப்பதற்கு ஒரு காரணம். மனதில் உற்சாகம் இருந்தாலே, முகத்தில் அழகு மிளிரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், உடலுக்கு தேவையான சில சத்தான உணவுப் பொருட்களை உண்ணுவதால், உடல் அழகு மேலும் பொலிவு பெறும்.

சிலர்,  அழகாக இருக்க் வேண்டும், கலராக மாற வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி அழகுக்கலைன் நிபுணர்களிடம் செல்வார்கள். அல்லது  தோல் மருத்துவர்களிடம் செல்வார்கள். ஆனால் உண்மையில் எப்போதெல்லாம்  கட்டாயமாக மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

1. முகத்தில் கண்கள் மற்றும் வாய் பகுதியைச் சுற்றி சுருக்கங்கள் வரும் போது கட்டாயம் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

2. முகத்தில் திடீரென்று வெள்ளை திட்டுக்கள் தோன்றினால்.

3, முகத்தில் திடீரென்று மச்சம் தெரிந்தால்.

4. உதடுகள் வறட்சியால் வழக்கத்தை விட கறுப்பாக தெரிந்தால்

5. சிறிய வயதிலியே முதுமைத் தோற்றம் போல் முகம் மாறினால்

6. தலையில் பேன் தொல்லை அதிகரித்தால்.

7. பருக்களில் தீராத அரிப்பு ஏற்பட்டால்

8. முகம் திடீரென்று மஞ்சள்  நிறத்தில் மின்னினால்.

இப்படி முக்கியமான சில மாற்றங்கள் உங்கள் முகத்தில் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது,.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close