மீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு!

கடைகளில் ரெடிமேடாக உள்ள பொடியை உபயோகப்படுத்துகின்றனர்

கடைகளில் ரெடிமேடாக உள்ள பொடியை உபயோகப்படுத்துகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு!

அசைவ உணவுப் பட்டியலில் உள்ள கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவற்றில் ஆரோக்கியத்தில் முதல் இடம் பிடிப்பது மீன். மீனில் கொழுப்புச் சத்தை விட புரதச் சத்துகள் மிகுந்துள்ளன. கண்பார்வை குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, இதயநோய் ஆகியவற்றிலிருந்து மீன் உணவு நம்மைப் பாதுகாக்கிறது. எனவே நாம் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisment

வறுவல் செய்யும் போது பெரும்பாலோர் கடைகளில் ரெடிமேடாக உள்ள பொடியை உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் போது அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இதனால் மீனின் உண்மையான சுவையும் மாற வாய்ப்பு இருக்கிறது. இந்த ரெடிமேட் பொடியை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு அதிகப்படியான காரம் போன்ற உணர்வு ஏற்பட்டு அவர்கள் மீன் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.

publive-image

இதை தவிர்க்கும் வகையில் முடிந்த வரை மீன் வறுவலை வீட்டு மிளகாய் பொடி கலவையில் ஊற வைத்து வறுப்பதே நல்லது. ஹோட்டலில் கிடைக்கும் சிவப்பான நிறம் போன்ற தோற்றம் வேண்டுமென்றால் அந்த கலவையில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அதை 5 நிமிடம் பிரிட்ஜில் வைத்து அதன் பின்பு வறுத்து எடுத்தால் பொன்னிறமான நிறம் கிடைக்கும்.

Advertisment
Advertisements

சமையல் குறிப்புகள்:

1. உருளைக் கிழங்கைத் தோல் சீவி, உப்புத் தண்ணீரில் ஊறவைத்து உலர்த்தி எண்ணெய்யில் வறுத்தெடுத்தால் வறுவல் மொறுமொறுவென இருக்கும்.

2. இட்லி அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் இட்லி பூப்போல் இருக்கும்.

3. உளுந்து வடைக்கு அரைக்கும்போது மாவு நீர்த்துவிட்டால் சிறிது அவலை மாவாக அரைத்துக் கலந்துவிட்டால் போதும்.

4.சப்பாத்திக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதில் இளநீர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

5.புதினா, மல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றில் துவையல் அரைக்கும்போது அவற்றுடன் மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்.

Food Tips Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: