நம்மில் நிறைய பேருக்கு செரிமான பிரச்சினைகள் உள்ளது. மேலும் இது எந்த நேரத்திலும் யாரையும் பாதிக்கலாம். சில நேரங்களில், உங்களுக்கு பிடித்த உணவுகளே உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அவற்றில் வாயு, வீக்கம் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற செயலற்ற தன்மை பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படும். ஆனால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் இந்த பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க உதவும் என்றால் ஆச்சரியம் தானே.
இந்திய சமையலறையில் சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் நிறைந்த மந்திர பொருட்கள் நிரம்பியுள்ளன. வாழ்க்கை முறை பயிற்சியாளர், லூக் குடின்ஹோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவர் வாயு, வீக்கம் மற்றும் அஜீரணத்திற்கான எளிய தீர்வைப் பகிர்ந்து கொண்டார். இந்த சக்திவாய்ந்த பானத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை இப்போது பார்ப்போம்.
பலர் அடிக்கடி வாயு பிரச்சனைகள், வீக்கம் மற்றும் சங்கடமான உணர்வை அனுபவிக்கிறார்கள். சில உணவுகள் உங்களுக்கு வாயுக்களை உண்டாக்கும். இதுபோன்ற உணவுகளிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிந்தவரை அந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாயு, வீக்கம் மற்றும் அஜீரணத்திற்கு இந்த மூலிகை பானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதேநேரம், உங்களுக்கு இந்த பானம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தவிர்த்து விடுங்கள் என லூக் குடின்ஹோ கூறுகிறார்.
மூலிகை பானம் செய்முறை
மூலிகை பானம் தயாரிக்க ஓமம், சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை தலா ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நான்கு மிளகையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். இந்த பானம் தயாரிக்க உங்களுக்கு 5-7 நிமிடங்கள் ஆகும். பின்னர் அதை வடிகட்டி, ஒரு நேரத்தில் சுமார் 200 மிலி குடிக்கவும். இது வீக்கம், அதிகப்படியான வாயு உருவாக்கம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. என லூக் குடின்ஹோ கூறுகிறார்.
அதேநேரம் இந்த பானம், பொதுவான செரிமான பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும், ஆனால் உங்கள் பிரச்சனையின் மூல காரணத்தை எப்போதும் நிவர்த்தி செய்து அதை அகற்ற முயற்சி செய்யுங்கள் என்று லூக் குடின்ஹோ கூறுகிறார்.
மேலே உள்ள கட்டுரை, தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைத் தேடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil