Skin Care News In Tamil Skin Care Tips with potato ice cubes Pomegranete Lemon Juice- சருமப் பராமரிப்பு, உருளை கிழங்கு ஐஸ் கட்டி
Skin Care News In Tamil: தோல் பராமரிப்புக்கு வரம்பு இல்லை, சுவாரஸ்யமான வீட்டு வைத்தியங்களுக்கு பஞ்சமில்லை. உருளை கிழங்கு சாறு சறுமத்துக்கு சிறந்தது என்பது நிரூபிக்கப்பட்டாலும், மிகவும் விரும்பப்படும் இந்த காய்கறியை உங்கள் தோல் பராமரிப்பு திட்ட உணவில் இணைக்க பல வழிகள் உள்ளன. ஒரு வழி சிறிய ஐஸ் கட்டிகளை செய்து அதை உங்கள் முகத்தில் வைத்து தேய்ப்பது, உருளைகிழங்கின் சாறு மற்றும் ஐஸ் கட்டி ஆகியவற்றின் நன்மைகளை சேர்த்து அனுபவிக்கலாம்.
Advertisment
நீங்கள் அதை எப்படி செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா, அது ஏன் பயனளிக்கிறது என்பதை அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.
தோல் தொடர்பான பல பிரச்சனைகள் உருளைக் கிழங்கின் மூலம் தீர்க்கப்படுகின்றன, மேலும் இந்த வீட்டு வைத்தியத்திற்கு உங்களுக்கு அதிகமான பொருட்கள் தேவையில்லை. சருமத்தை ஆற்றவும், அதை தணிக்கவும், இளைமையிலேயே முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்கவும், மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கவும் கோடை காலத்தில் ஒரு ஐஸ் கட்டியை முகத்தில் வைத்து தேய்த்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சிறிய அளவு உருளைக்கிழங்கு சாறு, சிறிது எலுமிச்சை மற்றும் மாதுளை ஆகியவற்றை சேர்த்து ஒரு ஐஸ் கட்டியை செய்வதன் மூலம் இந்த செயல்முறையை நீங்கள் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்கலாம்.
தனித்தனியாக இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் சருமத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அறியப்படுகிறது. மேலும் அவை ஒன்றிணையும்போது, ஒரு சிறந்த மற்றும் எளிதான தீர்வை உருவாக்குகின்றன.
உருளைக்கிழங்கு, எலுமிச்சை மற்றும் மாதுளம் பழம் ஆகியவற்றின் சாறை எடுத்து நன்றாக சல்லடை செய்துக் கொள்ளவும். பிறகு அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும். சேர்க்கும் போது எலுமிச்சை சாறு மட்டும் விகிதத்தில் சற்று குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இந்த கலவையை பிரீசரில் வைத்துவிட்டு குறைந்தது இரண்டு நாட்களுக்கு பிறகு வெளியே எடுக்கவும். ஐஸ் கட்டியை போல உருளைக்கிழங்கு ஐஸ் கட்டியை நேரடியாக அப்படியே முகத்தில் தடவ முடியாது ஏனென்றால் அது சற்று எரிச்சலை ஏற்படுத்தும். எனவே ஒரு பாதுகாப்பு வலையாக இந்த உருளைக்கிழங்கு ஐஸ் கட்டிகளை ஒரு கைகுட்டையில் வைத்து பொதிந்து அதை மெதுவாக முகத்தில் தேய்க்கவும். ஒரு ஐஸ் கட்டி ஒருநாளைக்கு போதும் மேலும் கழுத்து பகுதியிலும் உருளைக்கிழங்கு ஐஸ் கட்டி மூலம் தேய்க்க மறக்காதீர்கள். ஒரு ஐஸ் கட்டி தீரும் வரை ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போது.
இதை செய்து முடித்த பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ மறக்காதீர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”