சமூக வலைதள பயனர்கள் தங்கள் ஆன்லைன் நண்பர்களின் ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களை தாங்களும் பழகிக்கொள்கின்றனர் என ஆய்வுகள் தெரிவுக்கின்றன.
சந்தேகமில்லாமல் சமூக வலைதளங்கள் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏறிபடுத்தியுள்ளன. மேலும் தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆய்வு சமூகவலைதளங்கள் நமது உணவு பழக்கவழக்கங்களையும் பாதிக்கும் எனக் கூறுகிறது. Appetite, என்ற ஒரு அறிவியல் இதழில் வெளியாகியுள்ள அந்த ஆய்வறிக்கை சமூகவலைதள பயனர்கள் தங்களது நட்பு வட்டத்தின் பாதிப்பால் அவர்களை போல ஆரோக்கியமான அல்லது நொறுக்கு தீனிகளை உண்கின்றனர் என்று கூறுகிறது.
சில உணவுகளை தேர்ந்தெடுப்பதில் நாம் நினப்பதை விட நமது நட்பு வட்டத்தில் உள்ளவர்களால் நாம் ஆதிக்கம் செலுத்தப்படுகிறோம் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நமது சொந்த உணவு தேவைகளை தேர்வு செய்யும் போது மற்றவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை நமது ஆழ்மனதில் கணக்கிடுகிறோம்.
குழந்தைகளும் இளம்பருவத்தினரும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவுசெய்து நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடமும் அவர்களை ஆதிக்கம் செலுத்துபவர்களிடமும் உரையாடுகின்றனர். இந்த ஆய்வின் முக்கியமான புதிய முடிவுகள் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை சிறுவயதினிலேயே பின்பற்ற துவங்கி நமது வாழ்நாள் முழுவதும் அதை கடைபிடிக்க உதவும் தலையீடுகளை நாம் எவ்வாறு வழங்குகிறோம் என்பதை வடிவமைக்க உதவும்.
எவ்வாறாயினும், மக்களின் உணவுப் பழக்கத்திற்கும் அவர்களின் உடல் நிறை குறியீட்டிற்கும் (Body Mass Index) எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.