உணவகங்களில் வாங்கப்படும் இட்லி மிருதுவாக இருப்பதை பல நேரங்களில் பார்த்திருப்போம். வீட்டிலேயே அவ்வாறு இட்லி செய்வது எப்படி என தற்போது காணலாம்.
இரண்டு கப் அளவிற்கு பச்சரிசி சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒன்றரை கப் அளவிற்கு இட்லி அரிசி சேர்க்க வேண்டும். இவற்றை 3 முறை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
பின்னர், ஒரு கப் அளவிற்கு உளுந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம். இதையும் இரண்டு முறை கழுவி விட்டு தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இப்போது, அரை கப் அளவிற்கு மாவு ஜவ்வரிசி மற்றும் அவல் சேர்க்க வேண்டும். இதையும் ஒரு முறை கழுவி விட்டு தண்ணீர்ல் ஊறவைக்க வேண்டும்.
5 மணி நேரம் கழித்து ஜவ்வரிசி மற்றும் அவலை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதன் பின்னர், உளுந்தையும் தனியாக அரைத்து எடுக்க வேண்டும். அதற்கடுத்து, இவற்றை அரிசியுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இதையடுத்து, இவற்றை நன்றாக கலந்து எடுக்க வேண்டும். இந்த மாவு கலவையை 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். பின்னர், இந்த மாவில் இட்லி செய்தால் மிருதுவாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“