soft Chapati recipes in tamil: நம்மில் பலர் விரும்பி உண்ணும் உணவுகளுள் ஒன்றாக சப்பாத்தி உள்ளது. இந்த அற்புதமான உணவு சூடாக இருப்பதை விட சாஃப்ட் ஆக இருந்தால் தான் சிலர் உண்ணவே முன்வருகிறார்கள். அப்படி சாஃப்டாக சுட நாம் முயலாலும் போது பல சமயங்களில் சொதப்பி விடுகிறோம். சாஃப்டான சப்பாத்தி சுடுவது ஒன்றும் மாயா வித்தை அல்ல. அவற்றுக்கு சில டிப்ஸ்களே போதும்.
Advertisment
அப்படிப்பட்ட எளிமையான டிப்ஸ்களை இங்கு பார்ப்போமா!
சாஃப்ட் சப்பாத்தி சீக்ரெட்ஸ்:-
நாம் தயார் செய்யும் சப்பாத்தி சாஃப்ட் வர காஸ்ட்லியான கோதுமை ஒன்றும் தேவை இல்லை. சாதாரணமாக ரேஷன் கடையில் இருந்து வாங்கும் கோதுமை மாவே போதுமானது.
முதலில் தேவையான அளவிற்கு கோதுமை மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இந்த மாவுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதனால் சப்பாத்தி சுடும் பொழுது ஆங்காங்கே பிரவுன் நிறத்துடன் பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் நன்றாக வெந்து வரும்.
மாவு பிசையும் போது கவனமாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவு பிசைந்த பிறகு அவற்றின் மீது எண்ணெய் ஊற்றி தடவிக் கொள்ளலாம்.
இப்போது பிசைந்த மாவை அப்படியே விட்டு ஒரு ஈரத் துணியில் காற்று புகாதவாறு மூடி வைத்துக்கொள்ளவும்.
குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து அதன் மீது கொஞ்சமாக கோதுமை மாவை தூவி உருண்டைகள் பிடித்து கொள்ள வேண்டும்.
பிறகு அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக வைத்து மாவை வட்டமாக தேய்த்து கல்லில் சுட்டு எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சாஃப்டான மற்றும் வாயில் போட்டதும் கரையும் சப்பாத்தி தயாராக இருக்கும். இவற்றை உங்களுக்கு பிடித்தமான குருமா மற்றும் சைடிஸ்களுடன் சேர்த்து ருசிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“