scorecardresearch

தயிர் சாப்பிடும் போது கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

Some foods fish, mango, do not mix while eating curd: ஆயுர்வேதத்தின்படி, ஒரே நேரத்தில் புரதச்சத்துக்களைக் கொண்ட பல உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மீன் மற்றும் தயிர் இரண்டிலும் அதிக புரதம் உள்ளது.

Healthy food Tamil News: how to make curd at home without jaman or starter

கோடைக்காலம் வந்தாலே நாம் எல்லோரும் வெயின் தாக்கத்தைத் தணிக்க குளிர்ச்சியான பொருட்களைத் தேடுவோம். அப்படியான குளிர்ச்சி தரக்கூடியவற்றில் இயற்கையானதும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியதுமான பொருள் தயிர். எல்லோருடைய மதிய உணவின் இறுதியில் தயிர் கண்டிப்பாக இடம்பெறும். சிலர் மோரை விரும்புவர். இந்த தயிர் புத்துணர்ச்சி அளிப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களையும் அளிக்கிறது.

தயிர் செரிமானத்திற்கு தேவையான சிறந்த புரோபயாடிக் கூறுகளைக் கொண்டுள்ளது. லாக்டோபாகிலஸ் எனப்படும் ஆரோக்கியமான பாக்டீரியாவுடன் நொதித்தல் செயல்முறையால் தயாரிக்கப்படும் தயிரின் குளிரூட்டும் பண்புகள் செரிமான அமைப்பையும் குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இதனால்தான் இந்த கோடை காலத்தில் தயிர் நம்மில் பெரும்பாலோருக்கு ஒரு புனித உணவாக இருக்கிறது. ஆனால் தயிருடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வாருங்கள் தயிர் சாப்பிட்ட பிறகு நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை இப்போது பார்ப்போம்.

தயிரில் வைட்டமின் பி -2, வைட்டமின் பி -12 உள்ளிட்ட வைட்டமின்களும் மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. இருப்பினும், சில உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது உங்கள் செரிமானத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் சரும பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். ஆயுர்வேதத்தின்படி கூட தயிர் எடுத்துக் கொள்ளும் போது சில உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

Spicy Masala Fish Fry, Fish Fry in Tamil

ஆயுர்வேதத்தின்படி, ஒரே நேரத்தில் புரதச்சத்துக்களைக் கொண்ட பல உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மீன் மற்றும் தயிர் இரண்டிலும் அதிக புரதம் உள்ளது. அதிகப்படியான புரதத்தை எடுத்துக் கொள்வது அஜீரணம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

Easy Home Made Mango Jam video

நாம் அனைவரும் தயிர் சாப்பிடும் போது மாம்பழத்தையும் சேர்த்து சாப்பிடுவதை விரும்புகிறோம். ஆனால் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், தயிர் சாப்பிட்டபின் மாம்பழத்தை சாப்பிடுவது அல்லது இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவதால் உங்கள் உடலில் நச்சுக்களை ஏற்படுத்தும். மேலும், இந்த கலவையானது சிலருக்கு திடீர் உணவு எதிர்வினைகள் அல்லது தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தக்கூடும்.

உங்களுக்கு ஒரு ஆச்சரியம் தரக் கூடிய விஷயம் என்னவென்றால் பால் மற்றும் தயிரை ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பாலிலிருந்து தானே தயிர் வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பால் மற்றும் தயிரை இணைப்பது அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். பால் நொதித்தல் மூலம் தயிர் தயாரிக்கப்படுகிறது, ஏனெனில் புரதத்தின் இரு ஆதாரங்களும் கொழுப்புகளில் அதிகம் இருப்பதால், ஒரே நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

நெய் ஏற்றப்பட்ட ரொட்டிகள் அல்லது தயிரைக் கொண்ட சீஸி ஃப்ரைஸ் போன்ற எண்ணெய் உணவுகள் உங்கள் செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். மேலும் உங்களை சோம்பேறியாக உணர வைக்கும். எனவே இவற்றை தயிருடன் எடுத்துக் கொள்ளக்கூடாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Some foods do not mix while eating curd