ஆயிரம் சொல்லுங்க மாங்காய் சாதத்துக்கு ஈடு என்ன இருக்க முடியும்?

தேங்காய் அல்லது கொத்தமல்லி சட்னி வைத்து உண்டால் அதன் ருசியே தனிதான்...

South Indian recipe Mango Rice Recipe in Tamil : மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி,  மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில்  கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் சாதம். மிகவும் குறைவான நேரத்தில் சீக்கிரமாக செய்து முடிக்கக் கூடிய ஒரு உணவு இது. இன்று மாங்காய் சாதம் செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்.

மாங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்

8-10 மாங்காய்

சாதம்

1 கப் துருவிய தேங்காய்

3/4 கப் எண்ணெய்

கொத்தமல்லி இலை

தாளிப்பதற்கு

1/2 கப் வேர்க்கடலை

1/2 கப் பச்சை மிளகாய்

கொஞ்சம் கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்

1 கறிவேப்பிலை

சில கொத்து பெருங்காயம்

வெந்தயம் – 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்

கடலை பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்

1/2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1-2 டேபிள் உளுந்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன் ஸ்பூன் (சுவைக்கேற்ப)

செய்முறை

ஒரு பிரஷ்ஷர் குக்கரில் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்னும் அளவில் ஊற்றி, மூன்று விசில் வரும்வரை வேகவிடுங்கள். அதன் பின் 10-15 நிமிடங்கள் வரை ஆற விடவும். சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க அரிசி வேகவைக்கும்போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விடுங்கள்.

துருவிய ஒரு மாங்காய், வறுத்து நுணுக்கிய வெந்தையத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து வதக்கவும். இதன் பின் வேர்க்கடலையை சேர்த்து லேசாகப் பொன்னிறமாக வறுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய தேங்காய் இவைகளை சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும்.

இதையடுத்து வேக வைத்த சாதத்துடன் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இப்பொழுது துருவிய தேங்காய், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு இவற்றை மேலே தூவி நன்றாக கலக்கவும் இறுதியாக வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.  பின் தேங்காய் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

மேலும் படிக்க : தித்திக்கும் பாதாம் பூரி செய்வது எப்படி? பண்டிகை காலத்தில் சமைக்க ஒரு சூப்பர் டிஷ்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close