தித்திக்கும் பாதாம் பூரி செய்வது எப்படி? பண்டிகை காலத்தில் சமைக்க ஒரு சூப்பர் டிஷ்

பொறித்து எடுத்த பூரியை சர்க்கரை பாகில் சுடச்சுட நனைத்து அப்படியே தட்டில் வைத்து துருவிய தேங்காயை அதில் மேல் தூவி பரிமாறவும்.

Festival sweets Badam Poori home made recipe in Tamil
Festival sweets Badam Poori home made recipe in Tamil

Festival sweets Badam Poori home made recipe in Tamil : நவராத்திரி காலம் இது. இது முடிந்தவுடன் கையோடு தீபாவளியும் வருகிறது. என்ன சமைக்கலாம் என்று நினைத்து நினைத்து முடியை பிய்த்துக் கொள்ளும் அனைவருக்கும் ஈசியாக சமைக்க சூப்பரான ஒரு ரெசிபி இதோ உங்களுகாக…

செய்ய தேவையான பொருட்கள்

மைதா மாவு – 1 கப் சர்க்கரை

1/4 கப் உலர்ந்த தேங்காய் துருவல்

அரிசி மாவு

பொரிப்பதற்கு

3/4 கப் உருக்கிய நெய்

1/2 கப் எண்ணெய்

உப்பு – சுவைக்கேற்ப

ஏலக்காய் பொடி

2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்

1 டேபிள் ஸ்பூன் கிராம்பு 8-10

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து அதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்.

பின் ஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும் நன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரைந்த பின் அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும்.

இதையடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும் பிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்து எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும்.

அதன் பின் ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்.

பொறித்து எடுத்த பூரியை சர்க்கரை பாகில் சுடச்சுட நனைத்து அப்படியே தட்டில் வைத்து துருவிய தேங்காயை அதில் மேல் தூவி பரிமாறவும்.

மேலும் படிக்க : வீட்டுக்குள் சுற்றும் சிகரெட் வாடை, அகற்ற என்ன செய்யலாம் ?

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Festival sweets badam poori home made recipe in tamil

Next Story
வீட்டுக்குள் சுற்றும் சிகரெட் வாடை, அகற்ற என்ன செய்யலாம் ?Tobacco Odor Removal, how to get rid of cigarette smell
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com