இட்லி மாவில் ஜிலேபி, பால் பணியாரம்: சிம்பிள் செய்முறை

Idli maavu jilebi and paal paniyaram in Tamil: மீந்துபோன இட்லி மாவில் சுவையான பால் பணியாரம் மற்றும் சுவைமிகுந்த ஜிலேபி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

south indian recipes in tamil: how to make jalebi and Paal paniyaram with idli batter in tamil

traditional south indian recipes in Tamil: உங்க வீட்டுல இட்லி மாவு மீதம் இருந்த கவலையே பட வேண்டாம். அதில் சுவையான இனிப்பு பண்டங்களை செய்து ருசிக்கலாம். அந்த வகையில் ஒரு சூப்பரான தேங்காய் பால் பணியாரம் மற்றும் சுவைமிகுந்த ஜிலேபி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். இந்த சூப்பரான உணவுப் பொருட்களை செய்ய ரொம்ப கஷ்டப்பட தேவையில்லை. இது ஆரோக்கியமான மற்றும் நிறைவான உணவு என்றால் நிச்சயம் மிகையாகாது.

இட்லி மாவில் ஜிலேபி – தேவையான பொருட்கள்:-

இட்லி மாவு – ஒரு கப்
ஃபுட் கலர் – அரை ஸ்பூன்
உப்பு கால் – ஸ்பூன்
சர்க்கரை – அரை கப்.

ஜிலேபிக்கான செய்முறை:-

சுவையான ஜிலேபி தயார் செய்ய நாம் முதலில் செய்ய வேண்டியது சர்க்கரை பாகு. அவற்றுக்கு ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பின் மீது வைத்து சூடேற்றவும்.

பாத்திரம் சூடானதும் அதில் அரை கப் சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இவற்றை கைபடாமல் சிறிது நேரம் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். சர்க்கரை கெட்டியாகி பாகு வடிவத்திற்கு வரும்போது அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆற விடவும்.

ஓரளவு சர்க்கரைப் பாகு ஆறும் போது ஒரு சிட்டிகை ஃபுட் கலர் சேர்த்து கலந்து விடவும். தொடர்ந்து கெட்டியான இட்லி மாவுடன் கால் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இப்போது, நாம் தயார் செய்து வைத்துள்ள அந்த மாவை ஒரு மருதாணி கோன் வடிவில் உள்ளது பேப்பரில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.

அதன் பிறகு, எண்ணெயை சூடேற்றி மாவை ஜிலேபி வடிவில் எண்ணெயின் மீது பிழிந்து விடவும்.

ஒரு வேளை இட்லி மாவு திரிந்தால் அவற்றுடன் சிறிதளவு மைதா மாவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

தேங்காய் பால் பணியாரம்

தேங்காய் பால் பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்:-

கெட்டியாக இருக்கும் இட்லி மாவு – ஒரு கப் அளவு (உப்பு போட்டு கரைக்காமல்)
தேங்காய் துருவல் – ஒரு கப் அளவு
சர்க்கரை, ஏலக்காய் பொடி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

தேங்காய் பால் பணியாரம் செய்முறை

முதலில் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் ஏலக்காய்களை ஒரு மிக்ஸியில் இட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து அதிலிருந்து தேங்காய் பாலை பிழிந்து தனியாக (திக்காக) எடுத்துக் கொள்ளவும்.

பின்னர், அந்தத் தேங்காய் பாலுக்கு உங்களுடைய சுவைக்கு ஏற்றார் போல் சர்க்கரையைச் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது, இட்லி மாவில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, இவைகளை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இட்லி மாவு கெட்டியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

இதன் பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடான பிறகு, மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து சிறு சிறு போண்டாக்களாக எண்ணெயில் விடவும். இப்போது அவற்றை பொன்னிறமாக சுட்டு எடுத்துக்கொள்ளவும்.

இப்படி நாம் சுட்டு எடுத்த இந்த போண்டாக்களை சுடசுட தயாராக வைத்திருக்கும் தேங்காய்ப் பாலில் இட்டு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் அவற்றை ருசித்து மகிழவும்.

இந்த சூப்பரான மற்றும் ஆரோக்கியமான தேங்காய் பால் பணியாரம் வாயில் வைத்த உடனேயே கரைந்து உள்ளே போய்விடும். இவற்றை குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

மறந்திடாம இந்த இரண்டு சுவையான ரெஸிபிகளை முயற்சி செய்ங்க மக்களே!!!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: South indian recipes in tamil how to make jalebi and paal paniyaram with idli batter in tamil

Next Story
வீட்டில் காய்கறி இல்லையா? சுவையான புதினா குழம்பு இப்படி செய்யுங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com