மாவு அரைக்க வேண்டாம்: சுவையான இன்ஸ்டன்ட் மெதுவடை இப்படி செய்யுங்க!

Medu Vada Recipe in tamil: கனநேரத்தில் அரிசி மாவு மெது வடை எப்படி தயார் செய்யலாம் என்பதற்கான ஈஸியான டிப்ஸ்களை பார்க்கலாம்.

South Indian Vada in tamil: How to make Medu Vada in tamil

Arisi maavu vadai in Tamil: மசால் வடை, ஆமை வடை, உளுந்த வடை என பல பெயர்களில் அழைக்கப்படும் மெது வடை மிகச் சிறந்த காலை, மாலை சிற்றுண்டிகளில் ஒன்று. இவற்றோடு சுவையான தேங்காய் மற்றும் தக்காளி சட்னி சேர்த்து சுவைத்தால் அல்டிமேட் டேஸ்டாக இருக்கும். தவிர, தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சூடான மொறுமொறு மெதுவடை தயார் செய்து ருசித்தால் அருமையாக இருக்கும்.

நம்மில் சிலர் இந்த வகை வடை தயார் செய்வதில் ஏனோ சிரம படுகிறார்கள். முன்பெல்லாம் வடை செய்வதாக இருந்தால் கடலை பருப்பு அல்லது உளுத்தம்பருப்பை குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். ஆனால், இப்போது குறைந்த நேரத்தில், நினைத்த உடனே செய்யும் அளவிற்கு செய்முறைகள் மாறி விட்டன.

அந்த வகையில், கனநேரத்தில் அரிசி மாவில் எப்படி மெது வடை தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

மெது வடைசெய்யத் தேவையான பொருட்கள்:-

அரிசி மாவு – ஒரு கப்,
தயிர் – அரை கப்,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறிய துண்டு,
மிளகு – 1/2 ஸ்பூன்,
எண்ணெய் – 1/4 லிட்டர்,
கருவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லி – ஒரு கொத்து,
உப்பு – 1/2 ஸ்பூன்.

அரிசி மாவு மெதுவடை செய்முறை:-

முதலில் ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் ஒரு கப் அரிசி மாவுடன், அரை கப் தயிர் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். தோசை மாவை விட தண்ணியாக கரைக்கவும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அதன் பிறகு, ஒரு கடாயை எடுத்து சூடானதும், அடுப்பை மிதமான தணலில் வைத்து கலந்து வைத்துள்ள மாவினை ஊற்றி நன்கு கிளறி விடவும். அவற்றில் கட்டிகள் விழாமல் இருக்க சிறிது நேரம் கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவும்.

5 நிமிடங்களில் அரிசி மாவு நன்றாக வெந்து கடாயில் ஒட்டாமல் சுருண்டு வர ஆரம்பிக்கும் போது அடுப்பை அனைத்து கடாயை கீழே இறக்கவும்.

இப்போது மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி கரண்டியை வைத்து நன்றாக பிசைந்து விடவும். மாவு ஓரளவிற்கு ஆறியவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும். தொடர்ந்து அவற்றுடன் இஞ்சி, மிளகு, கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இதன் பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து கால் லிட்டர் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவினை சிறிய உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி மாவிற்கு நடுவில் மெது வடையில் செய்வது போல சிறிய ஓட்டை இட்டு எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

வடை அதன் இரு புறத்தில் நன்றாக சிவந்தவுடன் வெளியே எடுக்க வேண்டும். இப்படி நாம் தயார் செய்து வைத்துள்ள எல்லா மாவுகளையும் எண்ணெயில் இட்டு பொறித்து எடுத்துக்கொள்ளவும்.

இந்த சூடான மற்றும் சுவையான வாடையுடன் தேங்காய், வேர்க்கடலை அல்லது தக்காளி சட்னி சேர்த்து ருசித்து மகிழவும்!!!

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: South indian vada in tamil how to make medu vada in tamil

Next Story
வெல்லம்- நெய், வெல்லம்- எள், வெல்லம்- வேர்க்கடலை… இப்படி சாப்பிட்டுப் பாருங்க, அவ்ளோ பலன் இருக்கு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com