சமையலில் வெந்தயத்தின் பயன்பாடு குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், முளைவிட்ட வெந்தயம் பல நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
வெந்தயத்தில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால், அவற்றின் முழுமையான பலனை பெற முளைத்த வெந்தயத்தை பயன்படுத்துவது அவசியமாகும்.
முளைத்த கிராம்ஸ், பச்சை மூங் பருப்பு போலவே முளைத்த வெந்தயத்தை உட்கொள்ளும் போது டன் கணக்கில் மருத்துவ பலன்களை நாம் பெறலாம்.
அவற்றின் சில முக்கிய நன்மைகளை கீழே காணலாம்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தல்
முளைத்த மேத்தி குறிப்பாக நாள்பட்ட சர்க்கரை நோயை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிட உதவுகிறது. இதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரே நேரத்தில் அதிகமாக உயராது.முளைத்த வெந்தயத்தை பெற, நீங்கள் தொடர்ச்சியாக 5 நாள்களுக்காக நீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். பின்னர், அதனை கருப்பு மிளகு அல்லது உப்பு அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம்.
எடை இழப்புக்கு உதவுகிறது
முளைக்கும் செயல்முறையின் காரணமாக, முளைத்த வெந்தயத்தில் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கிறது.
தசைகள், மூட்டுகளை நல்ல நிலையில் வைத்திருக்க இதனை உணவு முறையுடன் சேர்த்து சாப்பிடலாம். முளைத்த வெந்தயத்தை உட்கொள்வதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் போதுமான அளவில் கிடைக்கிறது. மேலும், முளைத்த வெந்தயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், ஃப்ரீ ரேடிக்கல்ஸ் உருவாவதைத் தடுத்து, உங்களை எவ்வித சேதத்திலிருந்தும் பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
முளைத்த மேத்தியில் ஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற ஒளி வேதிப்பொருட்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதை உறுதிச்செய்கின்றன. முளைத்த வெந்தயம் உங்கள் உடலில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு நிலையை எளிதாக்குகிறது.முளைத்த வெந்தயம் பயன்பாடு மூலம் மேம்பட்ட தோல் மற்றும் முடி நிலையை பெற முடியும்.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது
பொட்டாசியத்தின் ஒரு சிறந்த ஆதாரமான முளைத்த வெந்தயம் சோடியத்தின் அளவைக் கண்காணிக்கிறது. ரத்த அழுத்தத்தை சமன் செய்கின்றன, கொழுப்பைக் குறைக்கின்றன. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது.
மெட்டாபாலிசம் மேம்படுத்தல்
ஊறவைக்கும் செயல்முறை வெந்தயத்தை மென்மையாக மாற்றுகிறது. இதனால்தான் ஜீரணிப்பது எளிதாகவும் வேகமாகவும் இருக்கிறது. இது கணையத்தில் பீட்டா செல்கள் உற்பத்தியை மேம்படுத்துகிறது. மேலும், அமிலத்தன்மை, வாய்வு, வயிற்றுப்போக்கு, அஜீரணம் ஆகியவை முளைத்த வெந்தயத்தை சரியான அளவில் உட்கொள்வதன் மூலம் சீராகுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil