/tamil-ie/media/media_files/uploads/2020/01/Srithika-wedding.jpg)
Srithika wedding
Srithika's Wedding : சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீத்திகா. மெட்டிஒலி சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து, ’முகூர்த்தம்’, ‘கலசம்’, ‘கோகுலத்தில் சீதை’ என தொடர்ந்து சீரியல்களில் நடித்தாலும், ‘நாதஸ்வரம்’ சீரியலின் மலர் கதாபாத்திரம் தான் ஸ்ரீத்திகாவை நன்கு அடையாளப்படுத்தியது.
சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !
View this post on InstagramFinally.... It was our marriage on 30th December 2019... I'm officially Mrs. Srithika Saneesh now
A post shared by Srithika Sri (@srithika_sri) on
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
’வெண்ணிலா கபடி குழு’, ’மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’, ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, ‘வேங்கை’ ஆகியப் படங்களிலும் ஸ்ரீத்திகா நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு தொலைக்காட்சி சீரியல்கள் தான் பெரும் வரவேற்பை அளித்தது. ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, ஹீரோவுக்கு அம்மாவாக, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’கல்யாணமாம் கல்யாணம்’ சீரியலில் ஒப்பந்தமாகி 6 மாதங்கள் வரை நடித்தார். பின்னர் கல்யாணப்பரிசு சீரியலின் வாய்ப்பு வரவே, மீண்டும் தாய்வீடான சன் தொலைக்காட்சிக்குத் திரும்பினார்.
DARBAR Promo : தர்பார் படத்தின் முதல் ப்ரோமோ வெளியீடு
இந்நிலையில் ஸ்ரீத்திகாவுக்கு திருமணம் ஆகி விட்டதா இல்லையா என்ற கேள்வி நெடுநாட்களாகவே இருந்து வந்தது. ரசிகர்களின் இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. ஆம்! தனக்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி திருமணம் நடந்ததாகவும், தற்போது தான் அதிகாரப்பூர்வமாக திருமதி.ஸ்ரீத்திகா சனீஷ் எனவும் இன்ஸ்டாகிராமில், திருமண வீடியோவை பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார் ஸ்ரீத்திகா. அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.