ஒருவரின் காலைப்பொழுது ஆரோக்கியமாகவும், ஆற்றல் மிகுந்ததாகவும் ஆரம்பிப்பது அவசியம். அதற்கு, ஃபைபர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை தவர வேறு சிறந்த வழி கிடையாது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதை எப்படி செய்வது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அதனை உங்களுக்காக விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பாத்ரா.
அவர் கூறுகையில், " காலைப்பொழுது தான் உங்களின் முழு நாளின் செயல்பாட்டையும் தீர்மானிக்கிறது. அதனை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமானதாகவும் தொடங்குவது அவசியம். நான் எனது உடலின் ஆற்றலை அதிகரிக்கவும், காலைப்பொழுதைச் சிறப்பாகவும் மாற்றநட்ஸ் சாப்பிட விரும்புவேன்" என தெரிவித்தார்.
அவர், "கனமான உணவைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, லேசான மற்றும் சத்தான உணவுகளுடன் நாளைத் தொடங்க வேண்டும். பெரும்பாலும் காலைப்பொழுதில் ஊறவைத்த பாதாம், நட்ஸ்களை சாப்பிடத் தான் விரும்புவதாகக் கூறுகிறார்.
ஊறவைத்த பாதாம்
காலையில் பாதாம் உட்கொள்வது, ஞாபக சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும். ஏனெனில் அதில் புரதம், வைட்டமின் ஈ, மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. அதிலும், ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது சிறந்தது ஆகும். ஏனெனில் அப்போது அதில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும் டானின்கள் இடம்பெற்றிருக்குமாம்.
ஊறவைத்த அக்ரூட் பருப்பு
உடல் ஆரோக்கியத்திற்கு அக்ரூட் பருப்பு எனப்படும் வால்நட்ஸ் மிகவும் சிறந்தது. இதில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாத்துக்கள் உள்ளன. அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதால் இவை "மூளை உணவு" என்றும் அழைக்கப்படுகின்றன.மேலும், அக்ரூட் பருப்புகள் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளது. அக்ரூட் பருப்புகளை ஊறவைப்பது சாப்பிடுவதன் மூலம்,உடலில் மெட்டோபாலிசம் அதிகரிக்கும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
எனவே, உங்கள் காலைப்பொழுதை நட்ஸ் வகைகளுடன் ஆரம்பித்து, ஆரோக்கியமாகவும், ஆற்றல் கொண்டதாக மாற்றுங்கள்