Advertisment

ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்குதா? அப்போ இந்த யோகாசனங்கள் ட்ரை பண்ணுங்க...

தொப்பை குறைய நல்ல வழி இது. இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும். மேலும் மன அமைதி கிடைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stress Reducing Yoga Postures

Stress Reducing Yoga Postures

Stress Reducing Yoga Postures : “நோய் மனம் சார்ந்து வருவது- மனதில் உருவாகி, உடலில் வெளிப்படுவது” என்பதை இன்று அறிவியல் ஆய்வுகள் ஒப்புக் கொள்கின்றன. அதிக மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியன, சர்க்கரை அளவை அதிகப்படுத்துகின்றன; மன அழுத்தம் அதிகமாகும்போது, கார்டிசால், அட்ரிலின் ஆகிய ஹார்மோன்கள் அதிகம் சுரக்கின்றன; மேலும், மேலும் அதிகமாகும்போது இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகின்றது.

Advertisment

Stress Reducing Yoga for good health

ஆகவே, மன ஒருமைப்பாடு நோயற்ற நிலைக்கு மிகவும் தேவை, மன ஒருமைப்பாட்டுக்கு, மன அழுத்தம் குறைய, தியானம், யோகா போன்றவை உதவும் (மன அழுத்தத்தை அதிகரிக்கம் ஹார்மோன்கள் சுரப்பு குறையும்; ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்) இவற்றோடு நல்ல ஓய்வும், தூக்கமும் இன்றியமையாதன. யோகஷ்டா குரு கர்மணி என்று வேதம் கூறுகிறது; எந்த வேலையையும், உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தும், ஒருங்கிணைந்து, செய்ய வேண்டும் என்பது இதல் பொருள்.

1) பாலாசனா

ஆனந்த என்றால் சந்தோஷமான, பால என்றால் குழந்தை, ஆறு மாதக் குழந்தை கால் விரல்களை எடுத்து கைகளில் பிடித்துக் கொள்வது போல செய்யப்படும் இந்த யோகாவிற்கு ஆனந்த பாலாசனா என்று பெயர் வந்துள்ளது.

பலன்கள் :

அடிவயிற்றில் தசைகளை சுருங்கச் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சிறு நீரகம், வயிறு ஆகியவை பலம் பெறும். மன அழுத்தம் குறையும். இடுப்பு வலி குறையும். மேலும் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம்.

2) விபரிதா கரணி (Viparita Karani)

விபரீதகரணி`விபரீத’ என்றால் தலைகீழ் என்று பொருள். கரணி என்றால் செயல்பாடு என்று பொருள். நமது உடலை தலைகீழாக புவிஈர்ப்பு சக்தியை நோக்கி வைப்பதால் உடல் உறுப்புகள் வலிமை பெறுகின்றன. முத்திரை பயிற்சியே ஆசனமாக வருவதால் பலன்கள் அதிகம். நல்ல துாக்கத்தைப்பெறவும் மன நின்மதியை அடையவும் இந்த யோகா உதவுகிறது.

பலன்கள்:

எல்லா நாளமில்லா சுரப்பிகளும் நன்றாக வேலை செய்யும். சிரசாசனம், சர்வாங்காசனம் ஆகிய ஆசனங்களின் பலன்களை கொடுக்கிறது. முதுகு வலி, கழுத்து வலி, தலை வலி, தலை சுற்றல் அஜீரணம் போக்குகிறது. முகத்தில் பொலிவு ஏற்படும்.

3) ஹஸ்த உத்தானாசனம்

இந்த ஆசனம் தோள்பட்டை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, முதுகெலும்புக்கு பலம் கிடைக்கும்.

செய்முறை : பத்தாம் நிலையிலிருந்து நேராக நிமிர்ந்து கைகளை மேலே உயர்த்தவும். அதே சமயம் இடுப்பிலிருந்து தலைவரைக்கும் உள்ள உடல் பகுதியை பின்பக்கமாக வளைத்து மூச்சை உள்ளே இழுக்கவும். முதுகை வளைப்பதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

பலன்கள்:  தோள்பட்டை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, முதுகெலும்பு பலம் பெறும்.

4) பச்சிமோத்தாசனம் :

இரு கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.

பயன்கள்:- தொப்பை குறைய நல்ல வழி இது. இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும். மேலும் மன அமைதி கிடைக்கும்.

யோகாவை கற்றுக் கொள்ள இத்தனை ஆப்கள் இருக்கின்றனவா?

Yoga
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment