சர்வதேச யோகா தினம் 2019 : யோகாவில் சகலமும் கற்க, இந்த ’ஆப்’களையெல்லாம் டவுன்லோட் செய்யுங்க!

இந்த ஆப்களில் ஏதாவது ஒன்றை உடனே டவுன்லோடு செய்து உங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள். 

5 useful android apps you should know, OkCredit, Boosted, Vedantu, Smarter, Fitvate
5 useful android apps you should know, OkCredit, Boosted, Vedantu, Smarter, Fitvate

International Yoga Day 2019 : Yoga apps for iOS, Android – ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது உலக யோகா தினம்.  டெல்லி, சிம்லா, மைசூர், அஹமதாபாத் மற்றும் ராஞ்சி ஆகிய ஐந்து பெரு நகரங்களில் சர்வதேச யோகா தினத்தன்று பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது அயூஷ் அமைச்சகம். பிரதமர் நரேந்திர மோடி, யோகாவின் தேவையை உணர்த்தும் வகையில் மிகப்பெரிய யோகா பயிற்சி நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

ஏற்கனவே உங்களுக்கு அருகில் இருக்கும் யோகா கலைக்கூடங்கள் மற்றும் யோகா பயிற்றுநர்களை அறிந்து கொள்ள உதவும் வகையில் யோகா லோக்கேட்டர் ஆப் ஒன்றை வெளியிட்டது. அது இல்லாமல் தற்போது ஸ்மார்ட்போனில் செம ஹிட்டடிக்கும் யோகா ஆப்கள் என்னென்ன என்பதை பார்ப்போம் !

Yoga apps for iOS, Android

Yoga Wave

யோகா வேவ் (Yoga Wave) எனப்படும் இந்த ஆப் ஆப்பிள் போன்களில் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவை. உங்களின் யோகா தொடர்பான அறிவினை வைத்து உங்களுக்கான பல்வேறு யோகா திட்டங்களை தொகுத்து வழங்கக்கூடியது இந்த ஆப்.

Breathe app (ப்ரீத் ஆப்)

ஆப்பிள் போன்களில் செயல்படும் மற்றொருமொரு செயலி. இதன் மூலம் உங்களின் மூச்சுப் பயிற்சியினை மேம்படுத்த இயலும். ஹெல்த் ஆப்புடன் உங்களால் இந்த ஆப்பினை இணைத்திட இயலும். இதன் மூலம் உங்களின் மூச்சுப்பயிற்சியினை இந்த ஆப் மேற்பார்வையிடும்.

Oak- Meditation and Breathing

தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிக்காக உருவாக்கப்பட்ட செயலி இதுவாகும். 10 நிமிடங்கள் தியானம் செய்வதற்கு உதவும் இந்த ஆப், உங்களின் மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியாக தூங்க உதவுகிறது. ஆப்பிள் போன்களில் மட்டுமே இந்த ஆப் செயல்படும்.

டெய்லி யோகா (Daily Yoga)

இந்த செயலியில் 500க்கும் மேற்பட்ட ஆசனங்கள், தியான முறைகள், உடற்பயிற்சி முறைகள் ஆகியவற்றை புதிதாக யோகா கற்றுக் கொள்ள வரும் நபர்களுக்கும், யோகாவில் அட்வான்ஸ் லெவலில் இருப்பவர்களுக்கும் அளிக்கிறது இந்த ஆப். ஆப்பிள் ஹெல்த் ஆப்புடன் நீங்கள் இதனை நீங்கள் இணைத்து ஹெல்த் மானிட்டரும் செய்து கொள்ளலாம்.

யோகா கோ (Yoga Go)

7 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரையிலான அனைத்து உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள இந்த ஆப் உங்களுக்கு உதவும். இது ஒரு மீல் ட்ராக்கராகவும் செயல்பட்டு உங்களின் டையட்டினையும் இது மேற்பார்வை செய்யும். உடல் எடையை குறைப்பதற்காகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசனா ரிபெல் (Asana Rebel- Yoga Inspired Fitness)

உடல் எடையை குறைத்தல், கலோரிகளை எரித்தல், ஃப்ளக்ஸிபலாக இருக்க தூண்டுதல் ஆகியவற்றிற்காக இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளடது. ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், போர்ச்சுகல், ஸ்பானீஷ் ஆகிய மொழிகளிலும் உங்களுக்கான இன்ஸ்ட்ரெக்சன்ஸை வழங்கும்.

Calm

இந்த ஆப் உங்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும். நிம்மதியாக உறங்க உதவும். தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவை தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் கற்றுக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும். இந்த ஆப்களில் ஏதாவது ஒன்றை உடனே டவுன்லோடு செய்து உங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: International yoga day 2019 best yoga apps for android ios

Next Story
அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜியோ… ரூ.500 விலையில் 4ஜி வோல்ட்இ போன்?Jio, Reliance jio, Feature phone,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express