ஒருவருக்கு நீரிழிவு நோய் அல்லடு நீரிழிவுக்கு முந்தை நிலை இருந்தால், ஹைப்பர் கிளைசீமியாவின் எனப்படும் அதிக சர்க்கரை நோய்க்கு வாய்ப்புகள் மிக அதிகம். இந்த உயர் ரத்த சர்க்கரைக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மிகவும் தீவிரமாக மாறும். அதே நேரத்தில், சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவ பல விஷயங்கள் உள்ளன. அதனால், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உடற்பயிற்சி செய்வதோடு உணவு முறையையும் மாற்ற வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட பானங்கள் என்று எதுவும் இல்லை என்றாலும் சர்க்கரையின் அளவை அதிகரிக்காத பானங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. குறிப்பாக, கார்போஹைட்ரேட் இல்லாத எந்த பானமும் நல்லதுதான்.
ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் பானங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்: அது எந்த பானம் என்றால் தண்ணீர்தான். அனைவருக்கும் ஆரோக்கியத்திற்காக எப்போதும் குடிக்க வேண்டிய பானம் தண்ணீர்தான்.
உண்மையில் தண்ணீர் சிறுநீரகங்கள் அதிகப்படியான ரத்த சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது. மேலும், ஊட்டச்சத்து ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட 2017 ஆய்வு, குறைவாக நீர் உட்கொள்ளும் ஒரு நபருக்கு ஹைப்பர் கிளைசீமியா (அதிக இரத்த சர்க்கரை) ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை இல்லாத தேநீர்
தண்ணீரைத் தவிர சர்க்கரையின் அளவை அதிகரிக்காத மற்றொரு பானம் என்றால் அது சர்க்கரை இல்லாத தேநீர். இது சர்க்கரை அளவை அதிகரிக்காத மற்றொரு பானமாகும்.
“எட்டு வாரங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை கெமோமில் தேநீர் அருந்துபவர்கள் சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை 2016 ஆம் ஆண்டு ஆய்வு நிரூபித்துள்ளது” என்று ஊட்டச் சத்து நிபுணர்க்ள் கூறுகிறார்கள்.
“ஆசியா பசிபிக் கிளினிக்கல் நியூட்ரிஷன் சொசைட்டியில் வெளியிடப்பட்ட மற்றொரு சுவாரஸ்யமான ஆய்வு, பிளாக் டீ குடிப்பவர்களுக்கு மற்றவரகளைவிட இரத்த சர்க்கரை குறைவாக இருப்பதாக நிரூபித்துள்ளது”
இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பைத் தடுக்க விரும்பினால், ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் காபி குடிப்பதை ஊட்டச்சத்து நிபுணர் போனி பரிந்துரைக்கிறார். ஆனால், கிரீம் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.
கடைசியாக, சோயா, பாதாம் அல்லது தேங்காய் போன்ற இனிக்காத தாவர அடிப்படையிலான பாலை தேர்வு செய்ய போனி பரிந்துரைக்கிறார். ஏனெனில் விலங்கு சார்ந்த புரதங்கள் இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையவை என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.