வெயிலில் செல்வதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும்!!!

வாட்டி வதைக்கும் வெயிலிருந்து தப்பிக்க மக்கள் ஜூஸ், நுங்கு, கூழ் இவற்றையெல்லாம் தேடி தேடி வாங்கி உண்ணுகின்றனர்

வெயில் காலம்  தொடங்கி விட்டது. வாட்டி வதைக்கும் வெயிலிருந்து தப்பிக்க மக்கள்  ஜூஸ், நுங்கு, கூழ் இவற்றையெல்லாம் தேடி தேடி  வாங்கி உண்ணுகின்றனர்.  பெண்கள் முகத்க்தை முழுவதுமாக மூடிக் கொண்டு வெயிலிருந்து தப்பித்து கொள்கின்றனர்.

வியர்க்குரு, ஒவ்வாமை, வியர்வை படிவதால் ஏற்படும் பூஞ்சை காளான் தொற்று என தோல் தொடர்பான பிரச்னைகள் தலையெடுப்பது இந்த கோடை வெயிலில் தான். விபத்துக்கு அஞ்சி, ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள்கூட, வெயிலிருந்து தப்பித்துக்கொள்ள ஹெல்மெட் போடுகின்றனர். இந்த அளவுக்கு  வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் இவ் வேளையில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை…

1. கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

2. நீராகாரம் அருமையான இயற்கையான பானம். காலையிலும் ஒரு டம்ளர், டிபன் சாப்பிட்டப் பிறகும் ஒரு டம்ளர் அருந்தலாம்.

3.  தினமும் குளிர்ந்த நீரில் இரண்டு முறை குளித்தால் வியர்க்குரு பிரச்னையிலிருந்து பாதுகாக்கலாம்.

4.  வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கட்டாயம்  வெயிலி செல்வதற்கு முன்பு குடையை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

5. வெயிலிருந்து பாதுகாக்க பலர் சன் ஸ்கீரின் லோஷன் பயன்படுத்துகிறார்கள். சன் ஸ்கீரின் லோஷனை 3 மணி நேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் மட்டுமே பலன் கிடைக்கும்.

6. இளநீரைப் போன்று சிறந்த எலக்ட்ரோலைட் வேறேதுவுமில்லை. இதில் இருக்கும் குளுக்கோஸ் நமக்கு உடனடி எனர்ஜியை அளிக்கின்றது. காலை நேரத்தில் இளநீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.

7. பொதுவாக கோடைகால சரும பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ள வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை குறைக்க வேண்டும்.

8. காபி மற்றும் டீ உடல் வெப்பத்தை அதிகரிக்கும் குணங்கள் கொண்டவை எனவே வெப்ப சூட்டை தவிர்த்துக்கொள்ள டீ மற்றும் காபியை தவிர்ப்பது நல்லது.

9. கோடை காலத்தில் வெயிலில் அலையாவிட்டாலும் கூட வியர்வை வழியாக உடலில் நீர்ச்சத்து குறைந்துகொண்டே தான் இருக்கும். எனவே, அதிகளவு தண்ணீர் பருக வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 10 – 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

×Close
×Close