Summer Days Skin Care Tips : பருவ காலங்களுக்கு ஏற்றவாறு அழகை அதிகரிக்க சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவோம். குறிப்பாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று உடுத்தும் உடையில் இருந்து, பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்துவோம்.
ஆனால் பலருக்கு கோடைக்கால சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து பல விஷயங்கள் தெரியாது. எனவே கோடை காலத்தில் சருமத்தை எவ்வாறு பராமரிக்கலாம் என பார்ப்போம்
Summer Days Skin Care Tips
சன் ஸ்க்ரீன்
சன் ஸ்க்ரீன் வெயிலில் செல்லும் முன் தவறாமல் சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக வெளியே செல்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பே சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்துங்கள். பல நாட்களுக்கு முன் வாங்கிய சன் ஸ்க்ரீன் லோசன் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அதில் UV அளவு குறைந்திருக்கலாம்.
மேலும் குளிர்ந்த நீரில் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும் இதன் மூலம் முகத்தில் ஏற்படும் வியர்வை மற்றும் தூசி ஆகியவை நீங்கி சுத்தம் பெரும் ஒரு பருத்தி துணியில் குளிர்ந்த பாலில் சன் ஸ்க்ரீனை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம்.
தர்பூசணி
கோடை காலத்தில் ஒருவர் கட்டாயம் சாப்பிட வேண்டும் தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற நீர் சத்து நிறைந்த பழங்களை. எண்ணெய், காரமான உணவு மற்றும் உப்பு, வறுத்த சிற்றுண்டி உணவுகளை எப்போதும் தவிர்ப்பது நல்லது.
பப்பாளி பழம்
பப்பாளி பழம் உங்கள் தோலுக்கு மற்றொரு அற்புதமான மருந்தாகும். பப்பாளி ஒரு பேஸ்ட் செய்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து உங்கள் முகத்தில் பூசி 20 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். முட்டை வெள்ளை மற்றும் தேன் சேர்த்து பப்பாளி பேஸ்டில் சேர்க்கலாம். வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் காரணமாக, இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் சருமத்தின் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. ஆகவே அழகை அதிகரிக்க கண்ட கண்ட பொருட்களைப் பயன்படுத்துவதை விட்டு, எளிய பொருட்களைக் கொண்டு எப்படி அதிகரிப்பது என்று யோசிக்க ஆரம்பியுங்கள். சரி, இப்போது அழகை அதிகரிக்க ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். மேலும் ரோஸ் வாட்டரைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் முகத்தை சுத்தப்படுத்தலாம்.
ரோஸ் வாட்டருடன், தக்காளி சாறு சேர்த்து கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், வெயிலினால் கருமையடைந்த சருமம் மீண்டும் பொலிவோடு மாறும். வேண்டுமானால் வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் மாஸ்க் போட்டாலும், வெயிலினால் ஏற்பட்ட சரும கருமை நீங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.