வெயில் நேரம்... இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீர்கள்!!!

இந்தக் காலத்தில் உடல் உஷ்ணத்தால் பித்தம் அதிகம் இருக்கும். இது ஹாலிடே டைம் என்பதால் பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதற்கான வாய்ப்ப அதிகம்

கோடை காலம் வந்து விட்டாலே உணவு பழகத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் மற்ற காலங்களைத் தவிர, கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக வெயில் காலத்தில் காதாரணமாகவே உடல் வெப்பமானது விரைவில் அதிகரித்துவிடும். ஆகவே அப்போது சாப்பிடும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தக் காலத்தில் உடல் உஷ்ணத்தால் பித்தம் அதிகம் இருக்கும். இது ஹாலிடே டைம் என்பதால் பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதற்கான வாய்ப்ப அதிகம். கூடுமானவரை வெளியில் சாப்பிடுவதை தவிரங்கள்.வெயில் காலத்தில் எந்தெந்த உணவுகளை  தவிர்க்க  என்று பார்ப்போமா…

1. கார உணவுகளை கோடையில் மட்டும் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும். அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் மசாலாப் பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.

2. ஆடு, கோழி, மீன் இறைச்சிகளை கோடைகாலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்’ உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது.

3. சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள், கிரீம் மிகுந்த பண்டங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

4. வெயில் காலத்தில் கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

5. அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே, இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.

6. ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே, கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

7. வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும்.

8. கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக சாதத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

9. எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையும் உண்டாகும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close