/tamil-ie/media/media_files/uploads/2020/03/Chocolate-Serial-Priyanka-Kumar.jpg)
Chocolate Serial Priyanka Kumar
Chocolate Serial Priyanka Kumar : சன் டிவி-யில் ஓளிபரப்பாகி வரும் ’சாக்லெட்’ சீரியலின் கதாநாயகி இனியா. சீரியலின் பெயருக்கு ஏற்றவாறு சாக்லெட் ஸ்கின் டோனில் இவரைக் காட்டுகிறார்கள். இனியாவின் நிஜப்பெயர் பிரியங்கா குமார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் முதன் முதலில் கன்னடத்தில் ஒளிபரப்பான ’கிருஷ்ண துளசி’ என்ற சீரியலில் தான் அறிமுகமானார்.
”சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்” – கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளி
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Priyanka-1.jpg)
அடிப்படையில் மாடலான இவர், 2016-ல் நடந்த ‘மேக்ஸ் இந்தியா மாடல் லுக்’ போட்டியில் பங்கு பெற்றதன் மூலம் பாப்புலரானார். மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ படித்தார். கன்னடத்தில் ஹீரோயின் / வில்லி என இரண்டு விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கும் பிரியங்கா, தனக்கு வழங்கப்படும் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிப்பதில் வல்லவர். ஆனால் வயதோ வெறும் 20 தான்.
கல்யாணத்தையே தள்ளிப்போட்ட நடிகை: தமிழ் சினிமாவையும் உலுக்கும் கொரோனா
சாக்லெட் சீரியலில் காட்டப்படுவது போல அவரது ஸ்கின் மாநிறம் அல்ல. முன்பே சொன்னது போல மாடலிங் துறையில் இருக்கும் பிரியங்காவுக்கு, ஃபேர் ஸ்கின். கர்நாடகாவில் பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு ஆடுவதும், பாடுவதும் மிகவும் பிடித்தமான விஷயங்கள். அதோடு நீச்சல் தான் பிரியங்காவின் பொழுது போக்கு. தண்ணீருக்குள் இருப்பதில், மீனுக்கே செம டஃப் கொடுப்பாராம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.