Hari Priya : சன் டிவி-யில் ஓளிபரப்பாகி வரும் ‘கண்மணி’ சீரியலில் வளர்மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹரிப்ரியா.
நினைவலைகளில் பிரியா, காத்திருப்பில் ஷ்ருதி: புகைப்பட தொகுப்பு
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான, ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து ’லட்சுமி வந்தாச்சு’, ’பிரியமானவள்’, ‘விதி’, ‘இஎம்ஐ தவணை முறையில் வாழ்க்கை’, உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். குறிப்பாக பிரியமானவள் சீரியலில் ஹரிப்ரியாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது.
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், இளங்கலை சைக்காலஜி படித்துள்ளார். பரத கலைஞரும் கூட. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவாராம். கனா காணும் காலங்கள் சீரியலில் வாய்ப்பு வந்தபோது, சரி முயற்சி செய்து பார்ப்போமே என ஏற்றுக் கொண்டாராம். பின்னர் அதுவே தொழில் வாழ்க்கையாக மாறியிருக்கிறது.
இந்நிலையில், நடிகை ஹரிப்ரியா, 2012 ஆம் ஆண்டு, பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராதிகாவின் ‘வாணி ராணி’ சீரியலில் போலீஸாக நடித்து பிரபலமானவர் விக்னேஷ். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், பொன் மகள் வந்தாள் என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
ஹரிப்ரியாவுக்கு டென்னிஸ் விளையாடுவதும், ட்ராவல் செய்வதும் பிடித்தமானவைகளாம். அதோடு ஸ்பானிஷ் உணவுகளை விரும்பி சாப்பிடுவாராம்.
”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்”… தினமும் 150 பாக்கெட் ரொட்டியை தயாரித்து வழங்கும் பேக்கரி!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”