Kutty Pooja : சீரியல் நடிகை குட்டி பூஜாவை யாராலும் மறக்க முடியாது. 2002-ம் ஆண்டு ராதிகா தயாரிப்பில், சன் டிவி-யில் ஓளிபரப்பான ‘அண்ணாமலை’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் பூஜா. முதல் சீரியலிலேயே அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில், பயங்கர சேட்டையும், குறும்புத்தனமும் செய்வதால், அவரை அனைவரும் குட்டி பூஜா என்று தான் சின்னத்திரை வட்டாரத்தில் கூப்பிடுவார்கள்.
காயத்ரியின் விர்ச்சுவல் ஃபோட்டோ ஷூட், ஐஸ்வர்யாவின் குவாரண்டைன் டைம் : படத் தொகுப்பு
சீரியலைத் தொடர்ந்து, இதனைத் தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். நடனம் என்பதே தெரியாத பூஜா, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் தான் நடனத்தை கற்றுக் கொண்டதாக நேர்க்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இன்னும் சர்ப்ரைஸாக ’ஜோடி நம்பர் 1’ நடன நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆனார்.
மகள்களுடன் குட்டி பூஜா
இதனைத் தொடர்ந்து குட்டி பூஜாவுக்கு பல சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஓளிபரப்பான ‘அழகி’, ’முந்தானை முடிச்சு’ போன்ற சீரியலில் நடித்தார். முந்தானை முடிச்சு சீரியலில் குட்டி பூஜா பிஸியாக இருக்கும் போது அவருக்கு திருமணம் நிச்சயமானது. இதனால் சீரியலுக்கு குட்பை சொல்லி விட்டு திருமணம் செய்து கொண்டார் பூஜா. அவரது கணவர் பெயர் மது. திருமணத்திற்குப் பிறகு தனது காதல் கணவருடன் கனடாவில் செட்டில் ஆகி விட்டார் பூஜா.
கனடாவில் இருக்கும் தமிழ் ரசிகர்கள், ‘நீங்க தானே குட்டி பூஜா’ என்று கேட்கும் போதெல்லாம் இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்று சந்தோஷப்பட்டு வருகிறாராம் பூஜா. இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் குழந்தைக்கு 9 வயதாகிறது. இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயது ஆகிறது.
குட்டி பூஜா
லேட்டஸ்ட் ட்ரெண்ட்: இயக்குநர் மகளின் கொரோனா ‘ஹேர் ஸ்டைல்’
ஒரு நேர்க்காணலில் இது பற்றி குறிப்பிட்ட பூஜா, முதல் குழந்தைக்கு நீச்சல், ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் உண்டு. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு இப்போதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. அவள் விருப்பப்பட்டால் சினிமாவில் நடிக்க நாங்கள் அனுமதிப்போம்” என்றார். அதோடு பூஜா தொடர்களில் நடிக்கவில்லை என்றாலும், கனடாவில் ஒளிபரப்பாகும் ஒரு டிவியில் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக, பணிபுரிந்து வருகிறார். தான் தமிழ் சீரியல்கள் எல்லாமே பார்ப்பதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பயங்கர ‘அடிக்ட்’ என்றும் முன்னர் தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”