'வாணி ராணி' டூ 'சித்தி 2' சீரியல்: ராதிகாவின் பெட் கேர்ள் செவ்வந்தி!

Sun TV Serial : ’பிள்ளை நிலா’, ’வாணி ராணி’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

Sun TV Serial : ’பிள்ளை நிலா’, ’வாணி ராணி’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sun TV Chithi 2 Neha Menon (1)

Sun TV Chithi 2 Neha Menon

Chithi 2 Serial : தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் மக்களிடம் மிகவும் பிரபலமானது. அந்த வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’வாணி ராணி’ தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது.

Advertisment

ரசிகர்களுக்கு ரொம்ப பிடிச்ச இந்த சீரியல் பிரபலம் யாருன்னு தெரியுதா?

இந்த தொடரில் வாணி கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் நடித்திருந்தனர். அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா, மார்ச் 14 ஆம் தேதி 2002 பிறந்த இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது கேரளவாக இருந்தலும் வரழ்ந்த்து எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்தார்.

Advertisment
Advertisements

Sun TV Chithi 2 Neha Menon (1) சன் குடும்ப விழாவில் நேகா...

இவர் தமிழில் ’பைரவி’ என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார். அதன் பின்னர் ’பிள்ளை நிலா’, ’வாணி ராணி’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், ’எல்லோ பெஸ்டிவல்’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். சீரியல் மட்டுமல்லாது திரைப்படங்களில் நடித்துள்ள நேகா சிபிராஜ் நடிப்பில், ’ஜாக்சன் துரை’, ஆர்யா நடிப்பில் ‘யட்சன்’ ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து : நாளை மனிதர்களிடம் சோதனை நடத்துகிறது ஆக்ஸ்ஃபோர்ட்

தற்போது, சித்தி 2 சீரியலிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 18 வயதாகும் நேகா இப்போது கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு கிராஃப்ட் வேலைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பெயிண்டிங் உள்ளிட்ட கை வேலைப்பாடுகளை தனது அம்மாவுடன் இணைந்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கிராஃப்ட்ஸ் சம்பந்தமான ஒர்க்ஷாப்களிலும் அம்மாவும் மகளும் தவறாமல் கலந்துக் கொள்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: