கீரையை விட பெஸ்ட்: சுண்டைக்காய் பயன்படுத்துவது எப்படி?

Sundakkai medicinal benefits பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காய் உதவுகிறது.

Sundakkai medicinal benefits பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காய் உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sundakkai medicinal benefits Sundaikkaai values Tamil News

Sundakkai medicinal benefitsTamil News

Sundakkai medicinal benefits Tamil News : பார்ப்பதற்கு மிகவும் சிறியதாகவும் சாப்பிட கசப்பாகவும் இருந்தாலும் சுண்டைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். பெரும்பாலானவர்கள் இந்த சுண்டைக்காயை அலட்சியப்படுத்துவதுண்டு. ஆனால், காய்கறிகளுள் இது நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு. உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை என இதிலிருக்கும் நன்மைகள் பற்றித் தெரிந்துகொண்டால் நிச்சயம் அடுத்தமுறை இதனை ஒதுக்கமாட்டீர்கள். இதில் கீரையைவிட ஏராளமான நற்குணங்கள் உண்டு என்று உங்களுக்கு தெரியுமா?

Advertisment

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:

சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக்  கட்டுப்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிவதைத் தவிர்க்கிறது.

சுண்டைக்காயில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணம் உள்ளது. இது, வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Advertisment
Advertisements

சுண்டைக்காயில் அதிகப்படியான இரும்புச் சத்து உள்ளது. இதனைத் தவறாமல் உண்ணும் உணவில்  சேர்த்துக்கொண்டால், நிச்சயம் ரத்த சோகையை எதிர்த்துப் போரிட்டு, உடலுக்கு அதிக வலுசேர்க்கும்.

காய்ச்சல் போன்ற உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் சுண்டைக்காயைச் சேர்த்துக்கொண்டால், வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரித்து உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்களையும், புண்களையும் கூட விரையில் குணமடையச் செய்கிறது.

நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுத்து, பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் உதவுகிறது.

பிரசவமான பெண்களுக்குப் பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாகக் கொடுக்கப்படும் ‘அங்காயப் பொடியின்’ பிரதான பொருளாக இருப்பது சுண்டைக்காய்தான்.

குழந்தையை ஈன்றெடுத்த தாய்மார்களுக்கு இந்த சுண்டைக்காய் மிகவும் நல்லது. இது, தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றுகிறது.

அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால், அவ்வப்போது நம் உடலில் தங்கும் நசுக்கி கிருமிகளுக்கு யமனாகச் செயல்படுகிறது இந்த சுண்டைக்காய்.

சுண்டைக்காயை நன்கு உலர்த்தி அதனைப் பொடியாக்கி தினமும் சிறிதளவு தண்ணீரில் அந்த பௌடரை கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்த் தொற்றும், அதன் விளைவாக உண்டாகிற அரிப்பும் குணமாகும்.

வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

சுண்டைக்காயைக் காய வைத்து, வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு, வறுத்து சூடான சாதத்தில், பொடித்துச் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும். மேலும், வாயுப் பிடிப்பு பிரச்சனைக்கான சிறந்த மருந்து இந்த சுண்டைக்காய்.

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொண்டால் எலும்புகள் பலமாகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: