Sundakkai vatha kulambu tamil video, srirangam sundakkai vatha kulambu making: அல்வாவுக்கு திருநெல்வேலி என்பதுபோல, வத்தக் குழம்பு என்றால் பலருக்கும் ஸ்ரீரங்கம் ஞாபகத்திற்கு வரும். வாசமான சூப்பர் வத்தக் குழம்பு வைப்பதில் அந்த ஊர்க்காரர்கள் கில்லாடி. எப்படி செய்கிறார்கள், ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு?
Advertisment
பெரிய சிரமமான விஷயம் இல்லை இது. ஸ்ரீரங்கம் வத்தக் குழம்புக்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்மு
srirangam sundakkai vatha kulambu making: ஸ்ரீரங்கம் சுண்டக்காய் வத்தல் குழம்பு வீடியோ
ஸ்ரீரங்கம் வத்தக் குழம்புக்கு தேவையான பொருட்கள் :
Advertisment
Advertisements
சுண்டக்காய் - 1 கப், வெந்தயம் - 2 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், மல்லி - 2 டேபிள் ஸ்பூன், மிளகு - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், வரமிளகாய் - 4, புளி - எலுமிச்சை அளவு, சின்ன வெங்காயம் - 50 கிராம், வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், அரிசி - 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
முதலில் புளியை கரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும். குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு தயார்.
வத்தக் குழம்பு, ஒரே நாளில் பயன்படுத்தித் தீர்க்கத் தேவையில்லை. எனவே அலுவலகல் செல்கிறவர்கள், குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறவர்களுக்கு இது வரப்பிரசாதம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"