Advertisment

சத்தான, ஆரோக்கியமான மசாலா சுண்டல்; ஈவ்னிங் ஸ்நாக்ஸா இதை செஞ்சு கொடுங்க

Kondakkadalai sundal tamil: பீச் ஸ்டைல் மசாலா சுண்டல் தயார் செய்ய ஈஸியான டிப்ஸ் இதோ…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sundal in tamil: steps for masala Sundar

Masala Sundal tamil: வீட்டில் நாம் பல வகை சுண்டல் தயாரித்து ருசித்து இருப்போம். ஆனால் சில நேரங்களில் கடைகளில் தயார் செய்வது போல் ருசி இருக்காது. அப்படி சுவையானதாக தயார் செய்ய தான் இங்கு ஈஸியான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.

Advertisment

இவற்றை நிச்சயம் உங்கள் ஈவ்னிங் ஸ்நாக்ஸா ட்ரை பண்ணலாம்.

மசாலா சுண்டல் செய்யத்தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டக்கடலை - 1/4 உழக்கு
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
தேங்காய் துருவல் - 1/4 மூடி
கடுகு - 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1டீ ஸ்பூன்
கருவேப்பிலை - 2 கொத்து
மாங்காய் - (பொடியாக நறுக்கியது)
லெமன்

அரைக்க:-

தேங்காய் - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு

செய்முறை

முதலில் ஊறவைத்து வெள்ளை கொண்டக்கடலைகளுடன் சிறிதளவு உப்பு குக்கரில் 5 விசில் வந்தவுடன் 3 நிமிடம் சிம்மில் வைத்து வேக வைத்து கீழே இறக்கவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம், பச்சை மிளகாய் ஆகிவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். தொடர்ந்து அரைத்து வைத்துள்ள மசாலா சேர்க்கவும்.

அவற்றை கிளறிய பிறகு முன்னர் வேகவைத்து கீழே இறக்கி வைத்துள்ள வெள்ளை கொண்டக்கடலையை அவற்றுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். தொடர்ந்து மாங்காய், லெமன் சாறு சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி கீழே இறக்கவும்.

இப்போது நீங்கள் தாயர் செய்துள்ள சுவையான மற்றும் ஆரோக்கியமான மசாலா சுண்டலை ருசித்து மகிழவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Tamil Lifestyle Update Healthy Food Tamil News 2 Healthy Food Food Receipe Healthy Food Kitchen Healthy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment