Masala Sundal tamil: வீட்டில் நாம் பல வகை சுண்டல் தயாரித்து ருசித்து இருப்போம். ஆனால் சில நேரங்களில் கடைகளில் தயார் செய்வது போல் ருசி இருக்காது. அப்படி சுவையானதாக தயார் செய்ய தான் இங்கு ஈஸியான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.
Advertisment
இவற்றை நிச்சயம் உங்கள் ஈவ்னிங் ஸ்நாக்ஸா ட்ரை பண்ணலாம்.
தேங்காய் - சிறிதளவு சீரகம் - சிறிதளவு காய்ந்த மிளகாய் - சிறிதளவு சோம்பு - சிறிதளவு மிளகு தூள் - சிறிதளவு
செய்முறை
முதலில் ஊறவைத்து வெள்ளை கொண்டக்கடலைகளுடன் சிறிதளவு உப்பு குக்கரில் 5 விசில் வந்தவுடன் 3 நிமிடம் சிம்மில் வைத்து வேக வைத்து கீழே இறக்கவும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம், பச்சை மிளகாய் ஆகிவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். தொடர்ந்து அரைத்து வைத்துள்ள மசாலா சேர்க்கவும்.
அவற்றை கிளறிய பிறகு முன்னர் வேகவைத்து கீழே இறக்கி வைத்துள்ள வெள்ளை கொண்டக்கடலையை அவற்றுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். தொடர்ந்து மாங்காய், லெமன் சாறு சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி கீழே இறக்கவும்.
இப்போது நீங்கள் தாயர் செய்துள்ள சுவையான மற்றும் ஆரோக்கியமான மசாலா சுண்டலை ருசித்து மகிழவும்.