ஒரு பக்கம் ஷூட்டிங்... மறுப்பக்கம் ஆராய்ச்சி படிப்பு.. சீரியல் ஆனந்தி ஆல்வேஸ் பிஸி!

சீரியல் மட்டுமல்ல, சினிமா, விளம்பரம் என எல்லாவற்றிலும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார்

சீரியல் மட்டுமல்ல, சினிமா, விளம்பரம் என எல்லாவற்றிலும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
suntv nayagi serial anandhi

suntv nayagi serial anandhi

suntv nayagi serial anandhi : சன் டிவி நாயகி சீரியலுக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் ஆனந்தியாக நடிகை விஜயலட்சுமி தான் நடித்து வந்தார். சீரியல் தொடங்கிய 20 ஆவது எபிசோடே சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பின்பு அவர்,பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் அவருக்கு பதில் இவர் என்று நடிகை வித்யா பிரதீப் எண்ட்ரி கொடுத்தார்.

Advertisment

வெள்ளித்திரை நடிகைகளைப் போலவே சின்னத்திரை நடிகைகளும பிரபலமடைந்து அனைவர் கவனத்தையும் சின்னத்திரை மேல் ஈரத்து வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சீரியலில் நடிக்கும் நடிகைகளை தான் பிடிக்கிறது. அப்படி எல்லோருக்கும் பிடித்தமான சீரியல் நடிகையாக இருக்கிறார் வித்யா பிரதீப். சினிமாவிலும் வித்யா நடித்து வருகிறார். ஆனாலும் சீரியல் தான் அவரை ரசிகர்களிடம் அதிகம் கொண்டுபோய் சேர்த்தது.

publive-image

சீரியல் மட்டுமல்ல, சினிமா, விளம்பரம் என எல்லாவற்றிலும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார். இது எல்லாவற்றுக்கும் மேலாக, வித்யா சயிண்டிஸ்டும் கூட.பிரபல கண் மருத்துவமனையில் பணி புரிந்தபடியே சீரியலில் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

ஆனந்தியின் உண்மையானப் பெயர் வித்யா பிரதீப். கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். இவர் சைவம் படத்தில் அறிமுகம் ஆகி, ‘அதிபர்’ படத்தில் ஜீவனுக்கு ஜோடியாக நடித்த வித்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய ’பசங்க 2’ படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘அச்சமின்றி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ’களரி’, ‘மாரி 2’, ’தடம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

டி.வி, செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளில் பல்வேறு விளம்பரங்களில் மாடலாக பணியாற்றியுள்ளார். ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் வித்யாவின் மருத்துவமனை படங்கள் சமீபத்தில் வெளியாகின. அதுவும் அவர், கொரோனா தொற்று குறித்த ஆராய்ச்சியில் இருப்பதாக கேப்ஷனும் பரவியது. ஆனால் அது பழைய புகைப்படம் என்று வித்யா விளக்கம் அளித்திருந்தார்.

மாஸ்க் போட்டு பர்த்டே கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா-தனம்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: