கலப்படம் உள்ள கிராம்பை கண்டறிவது எப்படி? ஒரு எளிய சோதனை

Tamil Health Update : கிராம்பிலும் கலப்படம் செய்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கறது. இந்த கலப்படத்தை ஒரு எளிய சோனையில் மூலம் கண்டறியலாம்.

Tamil Health Update : உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றால் சத்தான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்காக ஆரோக்கியமான உணவு பொருட்களை தேடி தேடி எடுத்துக்கொண்டாலும், அதுவும் சில சமயங்களில் பாதகமான நிலையை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கு முக்கிய காரணம் கலப்படம்.

எவ்வளவு சத்துள்ள பொருட்களாக இருந்தாலும் கலப்படம் செய்துவிட்டால், அது மனித உடலுக்கு விஷமாகத்தான் மாறும். இந்த கலப்பட பொருட்களை கண்டறிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் பல விழிப்புணவு தகவல்களை பரப்பினாலும், பொருட்களில் கலப்படம் செய்வது மட்டும் குறைந்தபாடில்லை.

ஆனாலும் இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் இவ்வப்போது பொருட்களில் உள்ள கலப்படத்தை எப்படி கண்டறியவது என்பது குறித்து வீடியோககளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கிராம்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எப்படி என்பது குறித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.

உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றும் கிராம்பு பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. இதனால் மருத்துவர்கள் பலரும் கிராம்பை முக்கிய உணவாக பரி்ந்துரைக்கின்றனர். ஆனால் இந்த கிராம்பிலும் கலப்படம் செய்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கறது. இந்த கலப்படத்தை ஒரு எளிய சோனையில் மூலம் கண்டறியலாம்.

சமையலறையில் சிறந்த தரமான பொருட்களைப் பயன்படுத்துவது முக்கியம். இருப்பினும், மசாலா மற்றும் மசாலாப் பொருட்கள் பெரும்பாலும் ரசாயனங்களுடன் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். இதை கண்டறியவேண்டியது மிகவும் அவசியம்.கிராம்பின் தரத்தை சரிபார்க்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள எளிய முறை

தேவையான பொருட்கள்

தண்ணீரருடன் கண்ணாடி க்ளாஸ்

சில கிராம்புகள்

செய்முறை

இரண்டு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டிலும் கிராம்பு வைக்கவும்.. இதில் கலப்படம் இல்லாத கிராம்பு தண்ணீரின் அடிப்பகுதிக்கு செல்லும். கலப்படம் செய்யப்பட்டவை தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும்.

கலப்படம் செய்யப்பட்ட கிராம்பு நீரின் மேற்பரப்பில் மிதக்கிறது, ஏனெனில் எண்ணெய் வடித்தல் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மஞ்சள் அல்லது ஹல்டியில் கலப்படம் உள்ளதா என்பதைக் கண்டறிய எளிய சோதனை

இரண்டு கிளாஸ் தண்ணீரை எடுத்து, அவற்றில் ஒரு சிறிய அளவு மஞ்சள் சேர்க்கவும். கலப்படமில்லாத மஞ்சள் உள்ள தண்ணீர் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும், மஞ்சள் நிறம் கீழே இருக்கும். மறுபுறம், கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள் கரைசலின் நிறம் வலுவான, பிரகாசமான மஞ்சள் நிறமாக மாறும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tami health simple test for identfy original adulterated cloves

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express