Advertisment

உடல் எடையை குறைக்க வேண்டுமா? வாழைத்தண்டை இப்படி செய்து சாப்பிடுங்க!

வாழைத்தண்டை சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Vaazhi Thandu Porial

வாழைத்தண்டு பொரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நமக்கு எளிதாக கிடைக்கும் மருத்துவ உணவு பொருட்களில் முக்கியமானவது வாழை. வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன் தரக்கூடியதாகத்தான் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் வாழைப்பழம் முக்கிய பங்காற்றுகிறது. குடல் இயக்கத்தை சீராக வைக்கவும் உதவுகிறது.

Advertisment

அதேபோல் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு என அனைத்தும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய நன்மைகளை கொடுக்கிறது. இதில் வாழைத்தண்டின் பயன் இன்றியமையாதது என்று சொல்லலாம். வாழைத்தண்டில் இருந்து வரும் சாறு சிறுநீரக கல் பிரச்சனை குணப்படுத்தும் திறன் கொண்டது.

வாழைத்தண்டை சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது. அந்த வகையில் வாழைத்தண்டு பொரியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு – 500 கிராம்

தேங்காய் துருவல் – 6 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

பூண்டு – 2

பெரிய வெங்காயம் – 1

பாசி பருப்பு – அரைக்கப்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு உளுத்தம் பருப்பு – ஒன்னறை டேபிள் ஸ்பூன்

சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

மல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் தேவையான அளவு

செய்முறை

முதலில் பாசி பருப்பை தனியாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொண்டு, வாழைத்தண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதன்பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு, நன்றாக வேக வைக்கவும். தண்டு நன்றாக வெந்தவுடன் அதில் ஏற்கனவே வேக வைத்துள்ள பாசி பருப்பை சேர்த்து, சில நிமிடங்கள் வேக வைத்து, இறுதியாக தேங்காய் துருவல், மல்லி இலை சேர்த்து சிறிது நேரம் வதக்கிவிட்டு இறக்கினால் சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார்.

நன்மைகள்

வாழைத்தண்டில் சிறப்பு வகை நார்ச்சத்து இருப்பதால், உடலில் கொழுப்பை குறைத்து உடல் எடை குறைய வழி செய்யும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும், மலச்சிக்ல், அசிடிட்டி பிரச்சனை, செரிமான பிரச்சனை ஆகியவற்றிக்கு தீர்வு தரும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சிறுநீரக கல் பிரச்சனைக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment