Advertisment

செக்ஸ் ஹெல்த் சீக்ரெட்: இந்த சின்ன பயிற்சியில் அவ்ளோ பலன் இருக்கு!

Tamil Lifestyle Update : நமது அன்றாட வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் பாலியல் பிரச்சினை பொதுவானதாக மாறிவிட்டது

author-image
WebDesk
Sep 15, 2021 13:56 IST
செக்ஸ் ஹெல்த் சீக்ரெட்: இந்த சின்ன பயிற்சியில் அவ்ளோ பலன் இருக்கு!

Tamil Health Update For Sexual Life : பெல்விக் பகுதியை வலுப்படுத்துவது மூலம் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் கூறியுள்ளார். மேலும் களரிசுத்ரா உடற்பயிற்சிகளுடன் கூடுதலாக கிகல் உடற்பயிற்சியும் உதவியாக இருக்கும் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisment

இன்றைய டிஜிட்டல் உலகிலும், பாலியல் ஆரோக்கியம் குறித்துப் பேச பெரும்பாலான மக்கள் தயக்கம்ம் காட்டுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், அவற்றைச் சரியான நேரத்தில் பேசி மருத்துவர்களின் கருத்தைப் பெறுவது வாழ்கையின் முக்கிய அவசியமாகும். அந்த வகையில், தமிழில் பில்லா 2 மற்றும் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வால், ஆண்களிடம் விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சினை சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும், பல மருத்துவர்களும் இப்பிரச்சினையின் தீவிரத்தைச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவருக்குச் சமீபத்தில் தான்  நந்திதா மஹ்தானி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இது குறித்து வித்யுத் ஜம்வால் கூறுகையில்," ஆணுறுப்பு விறைப்புதன்மை பிரச்சினை என்பது ஆண்களுக்கு உடல் ரீதியான அல்லது மன ரீதியான பிரச்சினை காரணமாக ஏற்படலாம். நமது அன்றாட வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் இப்பிரச்சினை பொதுவானதாக மாறிவிட்டது" என கூறியுள்ளார்.

இப்பிரச்னை குறித்து டெல்லி சன்ரைஸ் மருத்துவமனையின் ஆலோசகர் மற்றும் ஆண்ட்ரோலாஜிஸ்ட் மருத்துவர் கெளவுதம் பாங்கா, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் ஆணுறுப்பு விறைப்பு தன்மை குறைபாட்டை பெரியதாகக் கண்டுகொள்வது இல்லை. ஏனென்றால், மக்கள் அதனை மருத்துவ பிரச்சினையாகப் பார்ப்பது கிடையாது. அவர்களால், வெவ்வேறு காரணங்களால் உடலுறவில் ஈடுபடமுடியவில்லை என்ற கோணத்தில் மட்டும் தான் பார்க்கின்றனர்.

ஆனால், அதற்குப் பின்னால் பல மருத்துவ காரணங்கள் உள்ளன. நீரிழிவு, கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் (IHD), மனச்சோர்வு போன்றவை தான் விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இருப்பினும், இவை சரிசெய்யக்கூடிய பிரச்சினை தான்" எனக் கூறுகிறார்.

மேலும் ஜம்வால் கூறுகையில், " இடுப்பு பகுதியை வலுப்படுத்துவது மூலம் விறைப்புத்தன்மை பிரச்சினையைச் சரிசெய்திட முடியும் என்று கூறியுள்ளார். களரிசுத்ரா தொகுப்பில் மொத்தம் 19 பயிற்சிகள் உள்ளன. இவற்றைத் தினமும் செய்யும்போது, ரத்த ஓட்டம் புத்துயிர் பெற்று, பெல்விக் பகுதியில் மீண்டும் பாலியல் ஆர்வத்தை கொண்டு வர உதவியாக அமைகிறது" என்றார்.

இந்த பயிற்சிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என வழிமுறைகளை ஜம்வால்  வீடியோவாக வெளியிட்டுள்ளார்.



முக்கிய குறிப்புகள்:

  • கைகளை உடலுக்கு முன்பு 90 டிகிரியில் நீட்ட வேண்டும்
  • அடுத்து என்ன செய்ய வேண்டும் என சொல்லும் வரையில், முழங்கைகளை நேராக வைத்திருக்க வேண்டும்.
  • களரிசுத்ரா உடற்பயிற்சிகளுடன் கூடுதலாக, கிகல் உடற்பயிற்சியும் (Kegel exercises)உதவியாக இருக்கும்
  • இடுப்பு பகுதி தசையை 3 முதல் 5 விநாடி வரை இருக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். பின்னர், 1 முதல் 2 விநாடிகள் ஓய்வெடுக்கலாம்.
  • மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு வழிமுறை தான் 1 ரெப்பிடிஷன்( repetition) என கணக்கிடப்படும்.
  • 10 10 ரெப்பிடிஷன் என்பது ஒரு செட் ஆகும். எனவே, ஒருநாளில் 3 முதல் 6 செட் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Healthly Life #Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment