நெல்லிக்காய் ஜூஸ் தினமும் இப்படி சாப்பிடுங்க… சுகர் போயே போச்சு!

Tamil Health Update : சிறுகுறிஞ்சான், ஆவாரம், நிலவேம்பு, வெந்தயம், நாவல் கொட்டை, மருதம் பட்டை உள்ளிட்ட பல இயற்கை பொருட்கள் நீரிழிவு நோய்க்கு தீர்வு பெரிய பலன்களை கொடுக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் இப்படி சாப்பிடுங்க… சுகர் போயே போச்சு!

Tamil Health Update For Diabetes Patients: தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் தாக்கும் பொதுவான நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின கணக்ககெடுப்பின்படி கடந்த 2019-ம் ஆண்டு நீரிழிவு நோய் காரணமாக உலகளவில் சுமார் 15-லட்சம் பேர் இறந்துள்ளனர்.

இதில் 2018- கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 8 கோடி பேருக்கு நீரிழிவு நோய் தாக்கம் உள்ளதாகவும், இந்த நிலை அடுத்த 20 ஆண்டுகளில் 12.5 கோடியாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க செயற்கையான மருத்துவ முறைகள் பல இருந்தாலும், இயற்கையில் எளிதாக கிடைக்கக்கூடிய பல மருத்துவ முறைகள் உள்ளன.

நீரிழிவு நோய் டைப் 1 மற்றும் டைப் 2 என 2 முறைகளில் பிரிக்கப்படுகிறது. இதில் டைப் 1 என்பது இளம் வயதினரை அதிகமாக தாக்கும். கணையத்தில் இன்சுலின் சரிவர சுரக்காததால், இந்த டைப் 1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க இன்சுலின் மருத்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்

அதேபோல் டைப் 2 நீரிழிவு நோய் கணையத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக அளவில் இருந்தாலும், அதை உடல் உறுப்புள் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையாகும் இதனால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகி, சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. இந்த நீரிழிவு நோயை கட்டக்டுக்குள் கொண்டுவர பல மருத்துவ முறையிகள் ஆயுர்வேதத்தில் உள்ளன.

அதன்படி சிறுகுறிஞ்சான், ஆவாரம், நிலவேம்பு, வெந்தயம், நாவல் கொட்டை, மருதம் பட்டை உள்ளிட்ட பல இயற்கை பொருட்கள் நீரிழிவு நோய்க்கு தீர்வு பெரிய பலன்களை கொடுக்கும். இதில் ஆவாரம் செடியின் அனைத்து பாகங்களும் நீரிழிவு நோய்க்கு நன்மை தரும் வகயைில் உள்ளது. இதில் முக்கியமான நெல்லிக்காய் ஜூஸில் மஞ்சள் சேர்த்து தினமும், பகல் நேரத்தில் பருகி வந்தால், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். இன்சுலின் மருத்தை பயன்படுத்தும் டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

அதேபோல் திரிபாலா சூரணம், சீந்தல், நெருஞ்சில் மற்றும் மூக்கிரட்டை ஆகிய மூலிகைகள், நீரிழிவு நோய்க்கு மிகவுமு் பலன் தரும். அதிலும் வல்லாரைக்கீரை சிறு ரத்தக்குழாய் அடைப்பை சரி செய்யும். நாவல், பப்பாளி, கொய்யா, இலங்கை வில்வம், நெல்லி,  மாதுளை ஆகிய இனிப்பு குறைந்த பழங்கள் நீரிழிவு நோயை கட்டக்குள் வைக்கும் திறன் கொண்டுள்ளது. நீரிழிவு நோயால் ஏற்படும் கண்பார்வை இழப்பை சரி செய்ய கருவேப்பிலை பொடி மிகுந்த பலன் தரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health amla huice benefits for diabetes patients in tamil

Exit mobile version