ஊறவைத்த பாதாம்- முந்திரி… தினமும் உங்க முதல் உணவு ஏன் இப்படி இருக்கணும் தெரியுமா?

Tamil Lifestyle Update : இயற்கையிலேயே “பாதாம் சூடாகவும், திராட்சையும் குளிர்ச்சியாகவும் இருக்கும். அவற்றை ஒன்றாகச் சேர்ப்பது சிறந்தது,

Tamil Lifestyle Badam Benefits Update : உடலை ஆரோக்கியமாக வைக்க சத்தான உணவை எடுத்தக்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் காலை உணவாக ஆரோககியம் மிகுந்ததாக எடுத்தக்கொள்ளும்போது அன்றைய தினம் முழுவதும் நம் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம். முழு தானியங்கள், புரதங்கள், பால் பொருட்கள், பருப்புவகைகள் மற்றும் பழங்கள் அல்லது காய்கறிகள் அதிக ஊட்டசத்து நிறைந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம். தினசரி உணவில் இவற்றை முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால் இந்த உணவுகள் நீங்கள் சாப்பிடும் நேரத்தை பொறுத்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு மக்கிய பங்காற்றுவதில் பாதாம் பருப்புக்கு தனி இடம் உள்ளது. ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையுடன் நாளை தொடங்கும்போது அன்றைய தினம் சரியான தொடக்கத்தை அளிக்கும். இந்த உணவுகள் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக உணர வைப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற ஆசைகள் அனைத்தையும் விலக்கி வைக்கும். பாதாம் உங்கள் நினைவாற்றலுக்கும் நல்லது.

ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையை ஒன்றாக உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயற்கையிலேயே “பாதாம் சூடாகவும், திராட்சையும் குளிர்ச்சியாகவும் இருக்கும். அவற்றை ஒன்றாகச் சேர்ப்பது சிறந்தது, ஏனெனில் அது உங்களை முழுதாக வைத்திருக்கும் மற்றும் நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக உணர வைக்கும். நன்மைகளுடன் கூடிய சிற்றுண்டியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சை தரும் நன்மைகள் :

காலையில் உங்களை உற்சாகமாக உணர வைக்கிறது.

இதில் இருக்கும் இனிப்பு அல்லது உப்பு பசியைத் தடுக்கிறது.

மாதவிடாய் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது.

பாதாம் ஞாபக சக்திக்கு நல்லது என்று நாம் அனைவரும் அறிந்தது போல் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் தோல் மற்றும் முடிக்கு இது மிகவும் நல்லது.

ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் இதயத்துக்கும் நல்லது

உங்கள் அமிலத்தன்மையைத் தடுக்கிறது

பாதாமை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பாதாமில் டானின் என்ற கலவை உள்ளது, இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. பாதாம் ஊறவைத்தவுடன் டானின் அகற்றப்பட்டு, பருப்புகள் ஊட்டச்சத்துக்களை வெளியிட அனுமதிக்கிறது. பாதாமை ஊறவைத்து தோலுரிப்பதும் செரிமானத்தை எளிதாக்குகிறது. அவற்றை ஊறவைப்பதன் மூலம் கொழுப்பு செரிமானத்திற்கு நன்மை பயக்கும் லிபேஸ் என்ற நொதியும் வெளியிடப்படுகிறது.

பாதாமின் மற்ற நன்மைகள்

பாதாமில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன மற்றும் நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம், பாஸ்பரஸ் என இதன் ஊட்டச்சத்து பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எடை இழப்பு, நல்ல எலும்பு ஆரோக்கியம், உங்கள் மனநிலையை மேம்படுத்துதல், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான அபாயத்தைக் குறைத்தல், பல சுகாதார ஆய்வுகள் பாதாம் பருப்பின் பல நன்மைகளை உறுதிப்படுத்துகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health badam benefits update in tamil health benefits

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com