Advertisment

சுகர் பிரச்னை, ரத்த விருத்தி... வாழவைக்கும் வாழைத் தண்டு சாறு; இவ்ளோ நன்மையா?

Tamil Health News : சிறிதளவு எலுமிச்சை சாறுடன் வாழைத்தண்டு சாறு குடிக்கும்போது வாழைத்தண்டு பொட்டாசியம், எலுமிச்சை சிட்ரிக் அமிலும் இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.

author-image
WebDesk
Dec 24, 2021 19:36 IST
சுகர் பிரச்னை, ரத்த விருத்தி... வாழவைக்கும் வாழைத் தண்டு சாறு; இவ்ளோ நன்மையா?

Tamil Health Banana Stem Benefits Update : உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு தருவதில் இயற்கையில் கிடைக்கும்உணவு பொருட்களுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த இயற்கை பொருட்களில் முக்கியமானது வாழை. வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாகத்தான் இருக்கிறது. வாழை இலையில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Advertisment

வாழை நார் கூட கயிறு திரிக்க பயன்படுகிறது. வாழைக்காய், வாழைப்பூ, வாழைப்பழம், வாழைத்தண்டு, உள்ளிட்ட அனைத்தும் ஆரோக்கியமான உணவுருட்கள். இதில் வாழைத்தண்டு வைத்து பொறியல், கூட்டு சூப் செய்யலாம். ஆனால் வாழைத்தண்டை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் அதன் நன்மைகள் ஏராளம். சிறுநீரக கற்கள் முதல் பல நோய்களுக்கு வாழைத்தண்டு முக்கிய தீர்வாக பயன்படுகிறது.

இரத்தம அடுத்த உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல தீர்வாக உள்ளது. இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகையை கட்டுப்படுத்த உதவுகிறது.

சிறுநீராக தொற்றுகளை நீக்கி சிறுநீர் பாதையை சுத்தமாக்குவதில் வாழைத்தண்டு சாறு முக்கிய பயன் தருகிறது. தொடர்ந்து 3 வாரங்கள் வாழைத்தண்டு சாறு குடித்து வரும்போது சிறுநீரக தொற்று பாதிப்பு நீங்கும்.

உடலில் இன்சுலின் அளவை மேம்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கிய பயன் தருகிறது. வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால,இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வை கட்டுப்படுத்துகிறது.

வாழைத்தண்டு சாறுடன் சிறிதளலு இஞ்சியை சேர்த்து சாப்பிடும்போது உடலில் உள்ள கொழுப்பு குறைவும். செரிமானத்தை எளிதாக்கும். விரைவில் பசி எடுப்பதை தடுக்கும். வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது.

சிறிதளவு எலுமிச்சை சாறுடன் வாழைத்தண்டு சாறு குடிக்கும்போது வாழைத்தண்டு பொட்டாசியம், எலுமிச்சை சிட்ரிக் அமிலும் இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது. சர்க்கரை மற்றும் கொழுப்பு இரண்டும் ரத்தத்தில் கலப்பதை வாழைத்தண்டு சாறு தடுப்பதால், உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது.

உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வாழைத்தண்டு சாறு முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுகிறது.

வாழைத்தண்டு சாறை அப்படியே குடிக்க முடியவில்லை எள்றால் அதன ஜூஸ் அல்ல எலுமிச்சை சாறுடன் சர்்து குடிக்கலாம். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பயன்தரும் வாழைத்தண்டு அனைவரும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Health Tips #Banana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment