Tamil Health Tips Colorful Chappathi : ஆரோக்கிய வாழ்விற்கு சத்தான உணவை உட்கொள்ள வேண்டியது கட்டாயம். அதிலும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியன உணவுகளை கொடுப்பது அவசியமான ஒன்று. இதில் குழந்தைகளுக்கு உணவில் திருப்தி இல்லை என்று வரும்போது அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். இந்த நிலை வராமல் தடுக்க குழந்தைகளுக்கு சத்தாக அதே சமையத்தில் அவர்களுக்கு பிடித்தமான உணவை கொடுப்பது நல்லது.
அந்த வகையில் சப்பாத்தி ஆரோக்கியத்தை தரும் உணவாக உள்ளது. இந்த சப்பாத்தியை குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வடிவில் செய்துகொடுக்கலாம். அதே சமையம் வண்ணமயமான சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் செய்தும் அவர்களை மகிழ்விக்கலாம். இதில் செயற்கையாக கலர்களை பயன்படுத்தாமல் வண்ணமயமான சப்பாத்தி எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.
சமையல் கலைஞர் சரண்ஷ் கோய்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பீட்ரூட் மற்றும் கீரையைப் பயன்படுத்தி இதுபோன்ற சப்பாத்தி செய்வது எப்படி என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில், குழந்தைகள் இந்த சப்பாத்தியை விரும்பி நாப்பிடுவார்கள் என்றும், பீட்ரூட், கீரை மற்றும் பிற காய்கறிகளை பயன்படுத்தி கலர்புல் சப்பாத்தி செய்வது எப்படி என்பதை பார்க்கலாமா?
தேவையான பொருட்கள் :
மாவு -1 கப்
வேகவைத்த பீட்ரூட் கூழ் – 1 கப்
அல்லது
வேகவைத்த கீரை கூழ் - கப் -
செய்முறை
பீட்ரூட் அல்லது கீரையை வேகவைத்து குக்கரில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவு எடுத்து அதில் அழைத்து வைத்த பீட்ரூட் அல்லது கீரை கூட்டை சேர்த்து மாவை நன்றாக பிசையவும். வண்ணமயமான மற்றும் சத்தான சப்பாத்திகளை உருவாக்க இதைப் பயன்படுத்தவும். செயற்கை நிறங்கள் சேர்க்கப்படாத இந்த சப்பாத்தியை மதிய உணவாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மாலையில் ஸ்னாக்ஸ் போன்று கொடுக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil