எப்போ கிடைத்தாலும் மிஸ் பண்ணாதீங்க… இளமை ரகசியம் இந்த இளநீர் தான்!

Tamil Health Update : உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பாரம்பரியமாக நமக்கு முக்கய பங்காற்றுவது இளநீர். இளநீரில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளது.

Tamil Health Drink Coconut Water : பருவ காலம் மாறும்போது நோய் தொற்று தாக்கங்கள் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இந்த நேரத்தில் நமது உடலை பாதுகாக்க ஆரோக்கியமான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். பருவகால மாறுதலின்போது மட்டுமல்லாமல் எப்போதுமே நமது உடலை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பது அவசியமான ஒன்று.

தற்போது தொற்று பாதிப்பு தீவிரமாகி வருவதால்,  உணவு பழக்கவழக்கங்கள், உணவு தேர்வுகளில் கவனம் செலுத்துவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் தேவையான மாற்றங்களைச் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று, தாகத்தைத் தணிப்பது.

அவ்வாறு தாகத்தை தனிக்க நாம் எடுத்துக்கொள்ளும் பானம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது கட்டாயம். அந்த வகையில் தாகத்தை தனிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பாரம்பரியமாக நமக்கு முக்கய பங்காற்றுவது இளநீர். இளநீரில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளது. தற்போது இளநீரின் நன்மைகள் குறித்து நுண்ணறிவை ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி அகர்வால் கூறியுள்ளார்.

கோடைகால வெப்பத்தை தனிக்க இளநீர் ஏன் சிறந்த பானங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதை என்பது குறித்து அவர் தனது இன்ஸ்மடாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கோடை வெப்பத்தை சமாளிக்க இளநீர் சிறந்த பானங்களில் ஒன்றாகும், மேலும் இது உடனடி ஆற்றலை அதிகரிக்க சக்தி வாய்ந்த இயற்கை விளையாட்டு பானமாகவும் உள்ளது.

கடினமான, வியர்வை பயிற்சிக்குப் பிறகு மீண்டும் நீரேற்றம் செய்ய இளநீர் ஒரு சிறந்த வழியாகும்.

விளையாட்டு இடைவெளியின் போது சர்க்கரை மற்றும் பிற செயற்கை பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலான பாரம்பரியமான இளநீரை எடுத்துக்கொள்ளலாம்.இது குறைந்த கலோரி மற்றும் வயிற்றை மென்மையாக்குகிறது.

இளநீர் உடலில் ஏற்படும் நிறமியைக் குறைக்கவும், முகப்பரு, மந்தமான மற்றும் வறண்ட சருமத்திற்கு நல்லது.

சிறந்த ஹேங்கொவர் சிகிச்சை. ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்துகிறது, இது அடுத்த நாள் காலையில் தலைவலி மற்றும் குமட்டல் உணர்வை ஏற்படுத்தும். ஆனால் இளநீர் இரண்டையும் எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீட்டெடுக்கிறது.

இது மட்டுமல்லாமல் இளநீர் மேலும் ஒரு சக்திவாய்ந்த பானமாக கருதப்படுகிறது, உடலில் ஏற்படும் முதுமை தோற்றதை எதிர்த்து போராடும். மருத்துவ நியூஸ் டுடேவின் அறிக்கையின்படி, தாவரங்களில் காணப்படும் சைட்டோகினின்கள் இளநீரிலும் உள்ளன. அவற்றின் கலவைகள் பொதுவாக வயதான எதிர்ப்பு என கருதப்படுகிறது. எலும்புகளைப் பாதுகாக்க உதவும் கால்சியத்தின் நல்ல ஆதாரமாக இளநீர் அறியப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health drink coconut water benefits update

Next Story
அஜித் பட நடிகை.. சின்னத்திரையில் மிரட்டும் வில்லி.. பூவே பூச்சூடவா தேவிப்பிரியா பயோகிராபி!actress devipriya
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com